கடமைன்னு, அவர் பேசறாரு, எழுதறாரு......இன்னும் என்னய்யா வேணும்.....திராவிட நாடாவது வெங்காய நாடாவதுன்னு கூட அவர் வாயாலேயே வந்திருக்குது தெரியுமேல்லோ...
ஊழி: அதெல்லாம் படிக்கிறபோது சந்தோஷமாகத்தான் இருக்குது...ஆனா, இராமனை கொளுத்தறது...
காம: கொளுத்தறபோது, நானென்ன சிவகாசி வத்திபெட்டி குரோஸ் குரோசா வாங்கிக் கொடுத்தனா? கொளுத்தவே விடலே...தெரியுமா......இராஜகோபாலாச்சாரி இருந்தபோதாவது, பிள்ளையாரை, தெருத் தெருவாப் போட்டு உடைச்சாங்க...இராமர் படம் கொளுத்தினா, ஜெயில்தான்னு சொன்னேன் துணிச்சலா...அது அவரோட கடமை அதுக்காக அவர் பேரிலே கோபம் கொள்ளாதிங்கன்னு அவர், அவரோட ஆளுகளுக்குச் சமாதானம் சொன்னாரு......அவ்வளவு பக்குவமாக நிலைமை இருக்குது......
ஊழி: உத்யோக விஷயத்திலே எல்லாம்......
காம: என்ன......? என்னய்யா குடி முழுகிப் போச்சி.....? எல்லாம் அவங்க கட்சி ஆளுகளுக்குத் தூக்கி கொடுத்துவிட்டமா...?
ஊழி: அப்படிச் செய்யல்லேன்னாலும் எங்க ஆளுக! எங்க ஆளுகன்னு அவங்கச் சொல்லிக் கொள்றாங்க.....
காம: அது அவங்க இஷ்டம்....உனக்கென்ன நஷ்டம், சொல்லு..இதோ பாருய்யா ஒரு வேடிக்கை...இவரு இருக்காரே, இராஜரத்தினம்......
ஊழி: ஆமா, போலீஸ் ஐ.ஜி.....
காம: அவர்தான்......அவர் ஐ.ஜி. ஆன உடனே, என்ன பேசிக் கொண்டாங்க...?
ஊழி: எங்க ஆசாமின்னு அவங்க பேசிக் கொண்டாங்க...
காம: நவாப் ராஜமாணிக்கம் கம்பெனி தெரியுமாய்யா, டிராமா கம்பெனி...
ஊழி:தெரியுமே...சம்பூர்ண இராமாயணம் நடத்தினாங்க...
காம: அந்த டிராமாவிலே, இந்த ஐ.ஜி. தலைமை வகித்தார்—என்ன பேசினாரு தெரியுமா...தெய்வானுகூலம்—தெய்வீக சக்தின்னு எதுவும் கிடையாதுன்னு சில பைத்யக்காரர்கள் பேசறாங்க. அது சுத்த தப்பு. எனக்கு ஐ.ஜி. வேலை கிடைச்சதுகூட தெய்வானுகூலத்தாலேதான்னு, பேசினாரு தெரியுமா...
20
153