இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பக்கத்தில் இருந்த ஒருவர்: மகா சக்தி வாய்ந்தவளப்பா, இந்த மகாளி. இந்த மகாளியை மனதிலே பக்தியோடு பூஜை செய்து நம்பிக்கையாக கும்பிட்டு வந்தால் இந்த உலகத்தில் நடக்காதது ஒன்றுமில்லே.
மற்றவர்: அவள் கண்கண்ட தெய்வமாச்சேயப்பா. எந்த காரியமா இருந்தாலும் சரி கைமேல் பலன் கிடைக்கும்.
மணி: ஆனந்தனைப் பார்த்து இந்தாப்பா அப்பாவை பார்க்க வேண்டுமென்று பறந்தாய். இந்த பைத்தியக்காரன் பேச்சைக் கேட்டு அப்படியே நின்று விட்டாயே! வாப்பா போகலாம்.
[இருவரும் போகிறார்கள்.]
காட்சி 6
இடம்:—சுந்தரம் பிள்ளையின் வீடு.
இருப்போர்:—சொக்கன், அமீனா, வேதாசலம்.
இருப்போர்:—சொக்கன், அமீனா, வேதாசலம்.
சொ: எங்கே உள்ளே போன ஆளைக் காணோம். என்ன செய்து கொண்டிருக்கிறான்.
அமீனா: ஓய் சுந்தரம் பிள்ளை......சுந்தரம் பிள்ளை.
சொ: எங்கே காணோம் போய்த்தான் பார்ப்போம். ஹா எஜமான்......
[தூக்கு போட்டு கிடப்பதைப் பார்க்கிறார் வேதாசலம்.]
வேதா: அடப் பாவி.....
[எல்லோரும் போய் விடுகிறார்கள்.]
191