உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வே: யாருக்குத்தான் கஷ்டமில்லை; எனக்குந்தான் கஷ்டம் இருக்குது, இன்கம் டாக்ஸுக்கு பணம் கட்ட படியேறி இறங்குகிறேனே அது ஒன்றே போதும் இந்தப் பயல் அங்கே காட்ட வேண்டிய கணக்கை இங்கே வைத்துவிட்டு வந்துவிடுவான்; இங்கே வைக்க வேண்டிய கணக்கை அங்கே கொண்டுவந்து விடுவான்; இவனைக் கட்டிக்கொண்டு நான் படுகிற கஷ்டம் காளியாயிதான் கேட்கணும். சொக்கா! முனியாண்டி கடன் எவ்வளவுடா ஆகும்?

சொ: அது ஆகுதுங்க 50 ரூபாயிம் சொச்சம்.

வே: பெரிய கோடீஸ்வரகு இவரு. சரியா பார்த்து சொல்லுடா கழுதை......

சொ: 50 ரூபாயும், ஐந்தே முக்காலணாவும் ஆகுதுங்க.

வே: முருகா! அவனாலே கடன் கொடுக்க முடியலையின்னா, அவன் குடியிருக்கும் வீட்டையாவது என்மேலே எழுதி வச்சிடச் சொல்லு.

முரு: சரிங்க, நான் வர்ரேனுங்க.

வே: முருகா! உன் மகள் கல்யாண விஷயத்தை பற்றி என்ன முடிவு செய்தே? வேறெங்கேயோ—மாப்பிள்ளை பார்த்திருப்பதாக சொக்கன் சொன்னானே.

முரு: எனக்கு கொடுக்கிறதுக்கு இஷ்டம் தானுங்க. ஆனா, பொண்ணுதான் மாப்பிள்ளைக்கு வயசாயிடுத்து என்று சொல்கிறாள்.

வே: இதென்னடா ஊரிலே இல்லாத வழக்கம். வயசானா என்னவாம். என்ன தெரியும் அதுக்கு? மாட்டேன்னுதான் சொல்லும். நீயல்லவா சரிப்படுத்தனும்?

முரு: மாப்பிள்ளைக்கு வயசு ஆயிட்டுதுன்னா கொழந்தை யோசிக்குதுங்க.

வேதா: வயசு ஆயிட்டாமா? யாருக்குத்தான் வயசு ஆகாம இருக்காம்? ஏன் இவமட்டும் என்னிக்கும் இப்படியே இருக்கப் போராளாமா? முருகா செங்கோட்டா மகளுக்கு கல்யாணம் ஆனதே! மாப்பிள்ளைக்கு என்ன வயதிருக்கும். 60-க்கு மேலிருக்கு மில்லே?

முரு: அந்தக் கிழவன் அடுத்த வருஷமே செத்துபோயிட்டானுங்களே.

198