உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மணி: இந்தாப்பா. (போடுதல்)

பிச்: சாமி இது ஒரு ரூபாயிங்க.

மணி: தெரியுமப்பா இதை வச்சுக்க-இன்னும் நூறுபேர் கிட்டேபோய் பிச்சையினு கேட்காமே இன்னிக்கு பொழுதை நிம்மதியாக கழிச்சுக்கோ.

ஆனந்: மணி, உனக்கு தங்கமான மனசு.

மணி: சரி,வா கூல்ட்டிரிங் சாப்பிட்டு போகலாம்.

ஆனந்: ஐயோ நான் இன்றைக்கு விரதமாச்சேயப்பா.

[போகிறான்]

மணி: பைத்தியக்காரன். உழைக்கிறான் மாடுபோல. சம்பாதிக்கிற காசையெல்லாம் கற்பூரமாக வாங்கி கொளுத்துகிறான். (சிகரெட் பிடித்தல்) தூப தீப நைவேத்திய சமர்ப்பியாமி.

காட்சி 12

இடம்:—வேதாசல முதலியார் வீடு.
இருப்போர்:—வேதாசலம், முருகன், சொக்கன்,

வேதா: என்னப்பா விசேஷம் இன்றைக்கு கோவிலிலே.

முருகன்: ஒன்றுமில்லீங்க அந்த குளத்தங்கரை பாசானம் இருக்குதில்லீங்க.......

வேதா: எது; கார்மேகம் தரவேண்டிய கடனுக்கு விட்டுப் போனதுதானே.

முரு: ஆமாங்க. அது நம்ப கையிலே வந்ததும், விளைச்சல் அதிகமாகயிருந்ததுங்க இந்த வருஷம் அதனாலேதான், காளிக்கு ஒரு அபிஷேகம் செய்து வைச்சேனுங்க,

வே: அவசியம் செய்யவேண்டியதுதான். முருகா முனியாண்டி தரவேண்டிய பாக்கிக்கு என்ன சொன்னான்?

முரு: அவன் பெண்ஜாதி மலேரியாவில் படுத்து மூன்று மாசம் ரொம்ப கஷ்டப்படுகிறாளுங்க பாவம்.

197