மூர்த்தி: என்னை ஒரு சுமைதாங்கியென்று நினைச்சுக் கிட்டாவது உன் மனதிலே இருக்கிற பாரத்தை என்னிடம் சொல்லப்படாதோ?
சரசா: ஏண்டி அமிர்தம்! இன்னிக்கு காலையிலிருந்து என்ன வேலையைத்தான் செய்திருக்கிறாய் நீ? மூர்த்தி, வேலைக்காரிகிட்டே கொஞ்சுவதும், குலாவுவதும் வேலையாய் போய்விட்டது உனக்கு. (அமிர்தம் குடத்தைக் கீழே போட்டு விடுகிறாள்) ஏண்டி குடத்தை இப்படி கீழே போட்டிருக்கியே; யார் வீட்டு சொத்தடி இது?
அமிர்தம்: ஏன் அக்கா இப்படியெல்லாம் பேசுறீங்க.
சரசா: அக்காவாம், அக்கா; இந்தாடி இனிமே என்னை இந்த மாதிரி கூப்பிடாதே; இதே பழக்கந்தானே நாளைக்கு நாலு பெரிய மனுசங்க வந்திருக்கும்போது கூடவரும். போடி, போய் வேலையை பார்.
மூர்த்தி: பஞ்சவர்ண கிளியை பிடித்து கொஞ்சி விடலாம் என்று பனைமரம் ஏறும்போது பறந்தோடி விட்டது ஜாதிபேதமென்கிற கூண்டுக்கு; தரித்திரக் கம்பிகள் வேறு; என்ன உலகம் இது.
காட்சி 16
இருப்போர்:—ஆனந்தன், மணி, காளி மற்றும் மணிக்கு கடன் கொடுத்தவர்.
கடன் கொடுத்தவர்: டேய்! நீ என்கிட்டே பணம் வாங்கலையின்னு காளி முன்னாலே கற்பூரத்தை அணைத்திடு பார்க்கலாம்.
மணி: இப்ப சொன்னாபாரு; அது சரி வா போகலாம்.
க.கொ: (சூடத்தை பொருத்தி) டேய் எங்கே அணை பார்க்கலாம்; லேசிலே உன்னை விடமாட்டேன் ஆமா.
மணி: இந்த காளி அறிய சொல்லுகிறேன்; உன்கிட்டேயிருந்து கால் காசு வாங்கலே (சூடத்தை அணைக்கிறான்) போதுமா?
206