பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மா: போவுது, அப்பிடின்னாலும் இன்னும் ஒரு ரூபா? மன் : ஒரு ரூபாயா? முழுங்கிட்டேன். போயேன். யானா பசி, உயிர் துடிச்சுது, கொஞ்சம் நாஸ்தா பண்ணேன். ஒரு ரூபாய்க்கா?- மா: பசி மன் : ஏண்டி, எனக்கென்ன வயறு சாலா ? ரெண்டணாவுக் குத் தின்னேன். LOIT: மிச்சம்? மன்: மிச்சம் இருக்குது. மா எங்கே? மன்: இருக்குதுன்னா விடுவயா, சும்மா மனஷனைப் பிடுங்கித் தொலைக்கறயே. மா: எங்கேன்னு சொல்லேன். மன்: முடியாது போடி. சொல்ல முடியாது. காட்டவும் முடியாது. மா: இருந்தாத்தானே காட்ட. அந்த எழவெடுத்த சாரா யத்தை ஊத்திக்கிட்டு வந்தாச்சி. அடிவயத்தையே கலக்குதே, அடிக்கிற நாத்தம். மன்: நாத்தமா அடிக்குது? இவ உடம்பு சென்டு! நாத்த மாடி அடிக்குது நாயே! ஏண்டி! நான் என்ன ஜெமீன்தாரன் வீட்டு மருமவனா நாத்தமில்லாத ஒசத்தி சரக்கு சாப்பிட. [மாரி சிரித்துவிட்டு வெளியே போகிறாள்.] காட்சி 11 இடம்:- பூந்தோட்டம். இருப்போர்:-டாக்டர் சுசிலா, சிறுவர்கள். [டாக்டர்.குழந்தைகளை, தோளிலும் கால்மீதுமாக ஏற்றிக்கொண்டு சர்க்கஸ் வேடிக்கை செய் கிறார். மாரி வருகிறாள். சு: ஓஹோ! நேரம்போவதே தெரியவில்லை. இதோ அப்பா ஆள் அனுப்பிவிட்டார். நான் போகணும். 3

17

17