வே: தெரியுது. உங்க ஜமீன் என்மேலே விழுமென்று நினைக்கவே இல்லை. அந்த பாவி, உங்க பழைய எஜமான் வாங்கின கடனை திருப்பிக் கொடுக்க முடியாம இதைக் கட்டிவிட்டு போனான் என் தலையிலே.
கும்பலில் ஒருவன்: இந்த ஜமீன் அவர் கைவிட்டு போனது காளியாத்தா புண்ணியம் என்று ஊரல்லாம் ஒரே சந்தோஷப் படுறாங்க.
வே: நானும் அதற்காகத்தான் கோவிலுக்கு அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறேன். ஆனால் ஒன்று நீங்க அவன் தலையில் மிளகாய் அரைச்ச மாதிரி என்கிட்டே நடந்துக்கிடாதீங்க.
சொ: ஆமா அப்படி ஏதாவது நடந்தீங்க அப்புறம் எஜமான் ஆளே மாறிப் போய்விடுவார் ஜாக்கிரதை.
வே: சீ, கழுதை, வாயை மூடு. நான் கொஞ்சம் கண்டிப்பான பேர்வழிதான். ஏன்னா, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம்.
ஒருவன்: நாங்க அப்படி தப்பு தண்டாக்களுக்குப் போகமாட்டோ முங்க. எஜமான் அப்படி கொஞ்சம் ஜமீன் பக்கம் வரணும் என்று எங்களுக்கெல்லாம் ஒரே ஆசையா இருக்குங்க.
வே: அதுக்கென்ன, போகாம இருக்க முடியுமா? எல்லோருமா சேர்ந்து கோவிலுக்குப் போய் அபிஷேகத்தை முடிச்சிகிட்டு அப்புறம் ஜமீனுக்குப் போகலாம்.
ஜனங்கள்: சரிங்க.
காட்சி 18
இருப்போர்:—ஆனந்தன், ஆனந்தனுக்கு கடன் கொடுத்தவன்.
ஆனந்: இன்றைக்கு காலையில் தானுங்க வச்சிருந்த காசையெல்லாம் காளிக்கு சுண்டல் செய்யக் கொடுத்துட்டேனுங்க.
208