உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மணி: ஆமாப்பா ஆமா. காளியின் அருள் கிடைத்த சந்தோஷத்தினால்தான் இன்று காளி கோவிலில் அமர்க்களமாய் பூஜை நடக்கிறது. இன்று மாலை தேவிக்கு பணியாரம் பாயாசத்தோடு விருந்து பக்தர்களுக்கு. போய்ப் பாரப்பா, அந்த வைபவத்தைப் போய்ப்பார்.

[மணி போகிறான்]

ஆனந்: காளியின் அருள்? மோசக்காரனுக்கா அருள்? அதற்கு பூஜை? பாவி நடத்தும் பூஜை? பஞ்சமா பாதகன் நடத்தும் பூஜை. வஞ்சகன் நடத்தும் பூஜை?

[கோபமாக போகிறான் கோவிலுக்கு]

காட்சி 20

இடம்:—காளி கோவில்
இருப்போர்:—வேதாசலம், சொக்கன்.
[காளிகோவிலில் பூஜை நடக்கிறது]

வே: டேய் சொக்கா, பார்த்தியாடா?

சொ: பஸ்டுங்க.

வே: சீ, கழுதை? அதையாடா கேட்டேன்; வாசிப்பதை கேட்டு மெய் மறந்து நிற்கிறானோ பக்கிரிசாமி, அவன் கொடுக்க வேண்டிய போன மாதத்து வட்டிப்பணம் இன்னும் வந்து சேரல்லையடா?

சொ: ஆமாங்க கேட்கலைங்க. சமயம் கிடைக்கிற போது கேட்டு வாங்கிடணுங்க.

வே: இந்த மாதிரியெல்லாம் இருந்தா உருப்படாதுடா. பணம் பல வழியிலும் பாழாய்ப் போகிறது. இன்னிக்கு மட்டும் ஆயிரம் ரூபாய்க்கு மேலே சிலவழிந்து போச்சுடா கழுதை.

[பூஜை முடிந்து வேதாசல முதலியார் உள்பட எல்லோரும் போகிறார்கள் போனவுடன் ஆனந்தன் வருகிறான்.]

211