மணி: ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை ஆனந்த். இந்த உலகத்திலிருந்து நம்மை அடிமை கொண்டுள்ளவர்களை நாம் ஆட்டிவைக்க வேண்டுமென்றல்லவா சொல்லுகிறேன். ஆனந்தா! அகில உலகத்தை ஆட்டி வைக்கும் பணம் இருக்கிறதே, அதை நீ இப்பொழுது ஏராளமாய் பெற்றிருக்கிறாய். ஆகையால் நீ எதைச் செய்தாலும் தகும். என்ன சொன்னாலும் நடக்கும்; வா போகலாம்.
மணி: இவர்தான் வட்டியூர் ஜமீன்தார் உயர் திரு வேதாசல முதலியார், பெரிய மனிதர்.
பர: (முதலியாரைப் பார்த்து) நிறைய தெரியும், உங்களைப் பற்றி. ஆனால் பார்க்கத்தான் இல்லை.
பர: சீமாட்டிகளே, சீமான்களே! நான் பல வருஷ காலமாய் ஐரோப்பா தேசத்திலே சுற்றிக்கொண்டிருந்து விட்டேன். அதனால் உங்களில் பலரைக்காணும் பாக்கியம் இல்லாமல் போய்விட்டது. எங்கள் பூர்வீக ஜமீனை விட்டுவிட்டு இந்தப் பக்கம் வந்தவுடனே அதே சோகத்தால் மெலிந்து போனேன். டாக்டர்கள் நான் ஐரோப்பா செல்ல வேண்டும் என்று சொன்னார்கள். தாயாரை அப்போது விட்டு விட்டுச் சென்றவன் இப்போதுதான் திரும்பியிருக்கின்றேன், ஆதலால், இனி என் தாயாரையும், வீட்டையும் விட்டுப் போகிறதில்லையென்று தீர்மானித்து விட்டேன். உங்களையெல்லாம் சந்திப்பதற்காகவே இந்த டீ பார்ட்டி ஏற்பாடு செய்தேன். அழைப்பை ஏற்று என்னை கௌரவப்படுத்தியதற்காக—வந்தனம். (கைதட்டல்)
மணி: (லேடீஸ் ஓ எக்ஸ்யூஸ் மி) 'தோழர்களே, ஸ்ரீமதி சரசாதேவியின் நடனத்தை நீங்கள் கண்டு களித்தீர்கள்; பார்த்து ரஸித்தீர்கள். அவர்களே இந்த டீ பார்ட்டியிலே நடன விருந்து அளிக்கவேண்டுமென்று நான் ஆசித்தேன். என் நண்பர் மிஸ்டர் பரமானந்தன் அவர்களும் அதை ஆமோதித்தார்கள். 'அழைப்பை ஏற்றுக்கொண்டு அம்மையாரும் தன்னுடைய பொறுப்பைச் செய்து முடித்தார். ஏற்றுக்கொண்டது மட்டுமல்ல, இங்கு உள்ள அனைவரும் கண்டு மகிழும்படி நடத்தியும் தந்தார். அதற்காக, அவருக்கும் அவரது தோழியருக்கும் உங்கள் சார்பாகவும், மிஸ்டர் பரமானந்தன் சார்பாகவும், என் நன்றி' வந்தனம். (கைதட்டல்)
222