வே: அன்பு மிக்க நண்பர்களே, பரமானந்தன் நமக்கு அளித்துள்ள பார்ட்டி உண்மையிலே நமக்கு பரமானந்தமாக இருந்தது. அது அவருக்கு தெரியுமோ, தெரியாதோ, நான் அவருக்கு ஒரு விதத்தில் உறவினன் சில வருஷங்களுக்கு முன் அவர் இங்கு வந்து குடியேறினார்களே தவிர, அப்பொழுது அவர் யார்கிட்டேயும் நெருங்கிப் பழகியதில்லை. திடீரென்று ஒருநாள் கப்பலேறி விட்டார். அதற்கு பிறகு நான் அவருடைய தாயாரை அடிக்கடி போய் பார்த்ததுண்டு. அந்த அம்மா ஒருநாள் வேடிக்கையாக என்னிடம் உங்கள் மகள் சரசாவை என் மகனுக்கு கல்யாணம் செய்துவிட வேண்டும் என்று சொன்னார்கள். நானும், எல்லாம் நம்ம கையிலா இருக்கிறது; கடவுள் செயல் என்று சொன்னேன். பரமானந்தனுடைய தயாள குணமும், அடக்கமும், நன்னடத்தையும், ஒழுக்கமும் நம் குலத்திற்கே பெருமைதரக் கூடியது. ஆதலால் நான் பரமானந்தனுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். (கைதட்டல்)
வே: தம்பி பரமானந்தம் நான் வரட்டுமா?
பர சரி, செய்யுங்கள் மா......மா...
மணி: அடே, மாமா என்றுதான் சொல்லேன்.
வே: அதற்கென்ன. தம்பி இஷ்டப்பட்டால்.
மணி: இஷ்டம் என்னாங்க கலியாணத்தை நடத்திடுவோம்.
வே: சரி.
காட்சி 26
இருப்போர்:—பரமானந்தம், மணி.
பர: ஆடம்பரம் ஆடல் பாடல் விருந்து வேடிக்கை இவைகளுக்கு நான் ஒரு பதுமை. என் லட்சியம், சபதம் எல்லாம் எங்கே? எனக்கு இது ஒன்றுமே பிடிக்கவில்லை மணி. நான்
223