பஞ்சை சுந்தரம் பிள்ளை மகன். அவர் ஏழை ஆனால் யோக்கியர்; மானத்திற்காக மரக்கிளையில் பிணமானார். அவருடைய மகனா நான்; சே, சே இதை என்னால் சகிக்கவே முடியாது.
மணி: என்னப்பா அது? என்ன செய்யவேண்டுமென்கிறாய்?
பர: என் தகப்பனைக் கொன்ற பாதகனை ஒரே வெட்டில் கொலை செய்து வஞ்சம் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று நினைத்தபொழுது,
மணி: அடாது, அவனை ஒரே அடியாக வெட்டிப்போட்டால் பயனில்லை. அவனை கொஞ்சம் கொஞ்சமாக வாட்டி வதைக்க வேண்டுமென்று சொன்னேன். நன்றாக ஞாபகமிருக்கிறது.
பர: இந்த ஞாபகம் உள்ளவன் இப்பொழுது அவன் மருமகனாக்கி விட்டாயே. இது என்ன நியாயம்?
மணி: ஆம். பரமானந்தன் அவனுடைய மருமகன் ஆனந்தன் அவனுடைய பரம விரோதி.
பர: போதும் இந்த புதிர்கள்.
மணி: அவசரக்காரன் ஆனந்தா, கோட்டைக்குள் புகுந்து விட்டோம். இனி எதிரிகளின் மார்புக்கு நேரே செல்லும் நம்முடைய வாள். இதோ படித்துப் பார்; பழி தீர்க்கும் வழி. நான் வகுத்துள்ள திட்டம். படி முதல் பக்கத்தை!
பர: அடுத்துக் கெடுக்கும் படலம்.
மணி: அதுதான் இப்பொழுது நடந்தது. வெறும் ஆனந்தன் வேதாசல முதலியாரை நெருங்க முடியாது, ஆனால் பரம விரோதியான பரமானந்தனை, மேளதாளங்களோடு, விருந்து வைபவத்தோடு நாள் நட்சத்திரம் பார்த்து தன் ஒரே மகளான சரசாவை காணிக்கையாக கொடுத்து தன் மாளிகைக்கு அழைத்துக் கொண்டார். இதற்குப் பெயர்தான் அடுத்துக் கெடுக்கும் படலம்.
பர: அருமையான ஏற்பாடு! எங்கே பணத்தின் மீது பாசங்கொண்டு நம் திட்டங்களையெல்லாம் மறந்து விடுவாயோ என்று எண்ணினேன்.
மணி: பைத்தியம், அடுத்ததைப் படி.
பர: பணம் பாழாகும் படலம்.
224