பர: பாவம்! பெண்ணாயிற்றே; நயமாகக் கேட்டால் கூட வாங்கி கொடுத்துவிடுவாளே சரசா!
மணி: இரக்கம் காட்டுகிறாயா? ஆனந்த் அன்று உன் தந்தை மரக்கிளையில் தொங்கும்போது அவன் இரக்கம் காட்டினானா கருணை? அந்த அரக்கனின் மகள் இவள். ஆதலால் ஒரே கல்லில் இரண்டு பழம் விழவேண்டும். அவன் கண்ணீரும் கீழே விழவேண்டும்; அதே சமயத்தில் பணமும் கறந்தாக வேண்டும். என்ன சொல்கிறாய்?
பர: நான் தயார்! இப்பொழுதே ஆரம்பிக்கலாமா?
மணி: கொஞ்சம் பொறு, இனிமேல்தான் முக்கியமான கட்டங்கள் இருக்கின்றன. அதனால்......
பர: அதனால் ......?
மணி: இது இப்பொழுது தேவை. நீயே படித்துப் பார்.
பா: இடைவேளை.
காட்சி 27
இருப்போர்:—மணி, பரமானந்தன்.
மணி: எப்படி நம்ம ட்ரைவிங் (Driving).
பர: ரொம்ப ஸ்டடி (Study).
மணி: ஆம்! இந்த ஸ்டடி வேணும் உனக்கு. இன்று சகலவித அலங்காரத்துடன் வரவேற்கப் போகிறாள் உன் சரசா, சொக்கிவிடக்கூடாது. நமது திட்டங்கள் எல்லாம் தவிடு பொடியாகிவிடும்.
பர: கவலைப்படாதே, இந்த உள்ளம் அனல் போன்றது.
மணி: அவளுடைய கனிமொழிகளில் மயங்கி குளிர்ந்து விடாதே.
பர: பயப்படாதே! பாதையினின்று தவறமாட்டேன்.
மணி: கலக்கம் ஏற்பட்டால் உன் தகப்பனார் மரக்கிளையில் தொங்கியதை நினை!
226