காட்சி 28
இருப்போர்:—அமிர்தம், சரசா.
அமிர்தம்: இந்தாங்க அம்மா பூவு கேட்டிங்களே கொண்டு வந்திருக்கிறேன்.
சரசா: ஏண்டி இதற்குத்தான் இவ்வளவு நேரமா? யாரோடே வாயாடிக்கிட்டு இருந்தே. பெரிய இடத்துப் பிள்ளை. பேரீஸ் லண்டன் போனவரு. அவருக்கு இதுதான் பூவோ?
அமிர்தம்: இதுதாம்மா நம்ம தோட்டத்திலே இது தானுங்களே இருக்குது.
சரசா: சீ.கழுதை! வாயை மூடு! வர வர பேச்சு அதிகமாயில்ல வருது. இந்தா இதை சாப்பிடு (தின்று மிச்ச ஆப்பிள் பழத்தை எறிகிறாள், அமிர்தம் முழிக்கிறாள்) ஏண்டி முழிக்கிறே எச்சிலா இருக்கிறது என்று பார்க்கிறாயா? ஒன்றுமில்லேடி நான் சாப்பிட்ட மிச்சம் அது இந்த சமயத்தில் இதாவது கிடைத்தது என்று சந்தோஷப்படாமே!
வே: வாங்க மாப்பிள்ளை...செக்ரட்டரி ஸார் நீங்க.
மணி: பரவாயில்லை. பரவாயில்லை.
சரசா: இதோ பார்த்தீங்களா! எங்க நாடகத்துக்காக வாங்கினது.
பர : சகிக்கலை ஒன்றாவது. கர்மம்.
சரசா: இதை பாருங்க! நாடகத்திலே எனக்குக் கிடைத்த பரிசுகள்!
பர: பார்க்கச் சொல்லடி உங்க அப்பனை.
அமிர்தம்: அம்மா பழங்கள், கொண்டுவரச் சொன்னீங்களே.
சரசா: ஏண்டி நிற்கிறே சிலைமாதிரி, வைச்சுட்டுப் போ வெளியே.
பர: சரசா, யார் இந்த பொண்ணு?
227