சரசா: அவ நம்ம வீட்டு வேலைக்காரி.
பர: ரொம்ப நல்லா யிருக்குது. ரொம்ப நல்லா யிருக்குது லட்டு.
சரசா: அப்படியா சந்தோஷம்.
பர: பெய ரென்ன?
சரசா: ரவா லட்டு.
பர: அந்தப் பொண்ணோட பெயரு.
சரசா: குப்பி, (அலட்சியமாக) (அப்பொழுது உள்ளே இருந்து ஒரு குரல் அமிர்தம்.)
பர: குப்பி. அமிர்தம் என்கிற பெயர் நல்லா யிருக்கிறது என்றுதானே, குப்பி என்று சொன்னே. வேதாசல முதலியார் மகள்தானே, வேறே எப்படி யிருக்கும் புத்தி.
சரசா: ஆருயிரே, என் மேல் உங்களுக்கு என்ன கோபம். ஏன் இந்த கடுகடுப்பு? நான் செய்த பிழை என்ன? நான் தாயிழந்தவள்; எங்கப்பா என்னை, அவர் கண்களைப் போல பாதுகாத்து உங்களிடம் ஒப்படைத்தார். இனிமேல் உங்களிடம் தான் இருக்கிறது எந்தன் வாழ்வு.
பர: என் சிநேகிதர்களுக்கு. டீ பார்ட்டி வைக்கவேண்டும். அதற்காக ஐயாயிரம் ரூபாய் செலவாகும். உங்க அப்பா கிட்ட சொல்லி வாங்கிக் கொடு.
சரசா: நாளை வாங்கித் தருகின்றேன். கண்ணாளா இன்று.....
பர: இன்று நான் சொல்வதைப் போல் நீ செய். பணம் வாங்கிக் கொடுத்ததும் நாளை இருவரும் சந்திக்கலாம்.
அமிர்தம்: அம்மா, பால்.
சரசா: (கோபத்தோடு) போடி.
228