உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காட்சி 35

இடம்:—நந்தவனம்
இருப்போர்:—வேதாசலம், மூர்த்தி, அமிர்தம், பரமானந்தன்.


[அமிர்தம்—மூர்த்தி நந்தவனத்தில் காதல் கீதம் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.]

அமிர்: நம் காதல் வெறும் விளையாட்டாகி விடும் என்று எனக்கு எப்போதும் ஒரு பயம்.

மூர்த்தி: இதெல்லாம் வீண் பயம் அமிர்தம். உன்னை இழக்க நான் என்ன அவ்வளவு முட்டாளா? அமிர்தம், அப்பாவிடம் சொல்லி கூடிய சீக்கிரமே கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். அப்புறம் பாரேன், நம்முடைய மாளிகையில் ஒரு வஸந்த மண்டபமும் ஒன்று கட்டி, ஜலக்கிரீடைகளுக்கு ஒரு தடாகம் கட்டி, அதைச் சுற்றிலும் வெற்றி வேராலே வேலி போட்டு, அதைச் சுற்றிலும் மல்லிகை மலர்களால் அலங்கரித்து, அந்த மணம் கம்மென்று வீச, உன்னை என் மடிமேல் சாய வைத்து, இல்லேல்ல உன் மடிமேலே நான் சாய்ந்துகொண்டு...

[வேதாசலமும் பரமானந்தனும் வருகிறார்கள்.]

வே: பாடுவாடா பாடுவா! டேய் மூர்த்தி நீ பாட்டுதானா பாடுவ.

பர: மாமா! பாட்டு எங்கே? அதைக் கவனிச்சீங்களா? வசந்த மண்டபத்திலே......

வே: ஹும். வசந்த மண்டபந்தானா இருக்கும். இவரு கட்ற மாளிகையிலே!

பர: அங்கே ஜலக் கிரீடைக்கு ஒரு தடாகம் கூட இருக்கும்.

வே: இருக்கும்! இருக்கும்!! இந்தாடீ அமிர்தம், என்ன துணிச்சலடி உனக்கு? போய் வரச்சொல்லடி ஒங்கப்பனை அவன் கிட்டே பேசுகிறேன் நான். டேய் முர்த்தி! வேலைக்கு ஆள் வச்சா அவ சேலையையாடா பிடிச்சு இழுக்கிறது?

பர: அட, சேலையை பிடிச்சு இழுத்தாக்கூட என்னமோ விளையாட்டுத்தனமா செஞ்சிட்டான்னு விட்டுடலாமே மாமா! அவளுக்கு மாலையில்ல போடப் போராராம் மாலை?

239