உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வே: போடுவாரு, போடுவாரு, போடா போக்கத்தவனே! நடடா! வீட்டுக்கு மடையா.

[வேதாசலம் வீட்டில்]

மூர்த்தி: நான் எதையும் மறைக்க வில்லையே அப்பா. காம சேஷ்டையில்லையே நீங்க கண்டது.

பர: இல்லை. சகுந்தலை துஷ்யந்தன் நாடகம். வேதாசல முதலியார் தலைமையிலே. ஏம்பா அப்படித்தானே? மூர்த்தி! நீ இவ்வளவு சீக்கிரம் கெட்டுடுவேன்னு நான் நினைக்கவே யில்லை. நம்ப ஜாதி......குலம்......ஆசாரம்.....

மூர்த்தி: ஜாதி குலத்திலே எனக்கு நம்பிக்கை யில்லை.

பர: உனக்கில்லை. எனக்கிருக்கிது. எங்க மாமாவுக்கிருக்குது. ஏன் மாமா.

வே: ஆமாம் மாப்பிள்ளை. டேய் அந்தப் பெண்ணை டச்சி கிச்சி பண்ணியிருந்தா சொல்லடா. காசு பணம் கொடுத்து கழுதைகளை ஊரைவிட்டு ஓட்டிவிடலாம்.

மூர்த்தி: பணத்தை பாபக்கடை என்று எண்ணுபவள் அமிர்தம்.

வே: அட நிறுத்தடா! ஒரே வார்த்தை சொல்றேன். ஜாதி ஆசாரத்தைக் கெடுக்காதே.

மூர்த்தி: நான் அமிர்தத்துக்கு துரோகம் செய்ய முடியாதப்பா. இதோ நான் போகிறேன். அமிர்தத்தோடு கூலி வேலை செய்தாவது பிழைப்பேன். உங்கள் குலப் பெருமை குன்றாமலிருக்கட்டும்.

வே: டேய் மூர்த்தி! உன் மனசு என்ன இரும்பா?

பர: ஹும். இரும்புமில்லை பித்தளையு மில்லை. சும்மா பையன் மிரட்டுகிறான். வீட்டை விட்டு வெளியே போனா காரியம் பலிக்குங்கற தந்திரம்.

வே: அதுதான் நடக்காது மாப்பிள்ளை. அதுதான் இவருகிட்டே நடக்காதுன்றேன்.

பர: ஏம்பா! மூர்த்தி! நீ போயிட்டா என்னாப்பா? போயிட்டான் பிள்ளைன்னு மாமா தலை முழுகிட்டு போறாரு. என்ன பிரமாதம். ஏன் மாமா.

240