உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வே: பின்ன என்ன மாப்பிள்ளை. டேய் ஒரே வார்த்தை. அமிர்தம் என்ற பேரை மறந்துடறாயா? வீட்டை விட்டு வெளியே போயிடறயா? என்ன சொல்லுகிறே?

மூர்த்தி: அப்பா நான் வெளியே போயிட்டா உங்களுக்குத் தானே தலை யிறக்கம்.

வே: நீ என் பிள்ளேன்னு நெனைச்சாதானேடா தலையிறக்கம்!

பரமா: அப்படிச் சொல்லுங்க மாமா?

மூர்த்தி: அப்பா! அமிர்தத்திற்கு நான் எந்த விதத்திலும் துரோகம் செய்யமாட்டேன்.

வே: அப்படியா! இன்னையிலிருந்து நீ என் மகனல்ல; நடடா வெளியே !

பர: ஆமா வேதாசல முதலியார் மூர்த்தியோட அப்பனுமில்லை.

மூர்த்தி: அப்பா இதோ நான் போகிறேன்.

[மூர்த்தி வீட்டைவிட்டு வெளியேறுகிறான்.]

பர: ஆரம்பித்துவிட்டது சுந்தர காண்டம்.

வே: நீ வேற வெந்த புண்ணிலே வேல் கொண்டு குத்து.

பர: வெந்த புண்ணிலே வேல், மரக்கிளையிலே பிணம்.

காட்சி 36

இடம்:—அமிர்தத்தின் வீடு.
இருப்போர்:—மூர்த்தி, அமிர்தம்.
[மூர்த்தி நேராக அமிர்தத்தின் வீட்டிற்குப் போகிறான்]

மூர்த்தி: அமிர்தம்!

அமிர்: நீங்களா!

31

241