காட்சி 38
இருப்போர்:—அமிர்தம், மூர்த்தி.
அமிர்தம்: குடும்பத்தை கெடுத்தவளென்று சொல்லுவாங்களே.
மூர்த்தி: உண்மையை கூற முடியாத ஊமைகள்.
அமிர்தம்: தந்தைக்கும் தநயனுக்கும் சண்டை மூட்டினவளென்று தூற்றுவார்களே.........
மூர்த்தி: இதய ஜோதியைக் காணாத குருடர்கள்.
அமிர்தம்: தகப்பனையும் மகனையும் வேறுபடுத்தினவள் என்று ஏசுவார்களே!
மூர்த்தி: காதல் கீதம் கேட்டறியாத செவிடர்கள்.
அமிர்தம்: என்னத்தான் காதலென்றாலும் கட்டுப்பாட்டையும் காவலையும் மீறலாம்ன்னு கேப்பாங்களே........
மூர்த்தி: அமிர்தம்! சொல்வேறு, செயல் வேறாக உள்ள சோம்பேறிகளிடம் உலகம் சிக்கிச் சீரழிகிறது. நாம் அந்த கொடிய சிறையிலிருந்து வெளியேறுகிறோம் சிரித்துக்கொண்டு. அமிர்தம் நான் இன்றே சென்னை போகிறேன்; அங்கு என் நண்பர்களின் உதவியைப் பெற்று உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். அதுவரையும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
அமிர்தம்: என் பொருட்டு உங்களுக்கு இவ்வளவு கஷ்டம்?
மூர்த்தி: ரோஜாவைப் பறிக்கும்போது கூடத்தான் முள் தைக்கிறது கையிலே. இதெல்லாம் ஒரு கஷ்டமா?
244