உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காட்சி 50

இடம்:—நீதி மன்றம்.
இருப்போர்:—பப்ளிக் பிராஸிகியூட்டர், சேவகன், சுந்தரகோஷ், வடநாட்டு வக்கீல், ஜட்ஜ்.


[பழைய ஆனந்தனாகிய பரமானந்தன் வடநாட்டு வக்கீலாகவும் மணி அவன் வேலைக்காரனாகவும் மாறுகிறார்கள்.]

மணி: ஆனந்தா நான் சொன்னதை யெல்லாம் உண்மையிலே நம்பிவிட்டார் வேதாசல முதலியார். ஆனால் அவருடைய பரம விரோதியே வடநாட்டு வக்கீலாக வருவது அவருக்குத் தெரியாது. பாவம்! பழி வாங்கும் படலத்தின் கடைசிக் கட்டம்! பஸ்ட்கிளாஸ் சான்ஸ்!! விளம்பரப்படுத்தி பழி வாங்குவதற்கு அருமையான சந்தர்ப்பம். ஆனந்தா நினைவிருக்கட்டும். மூர்த்தியின்மேல் சுமத்தப் பட்டிருக்கும் குற்றம் கொலை.

[கோர்ட் விசாரணை]

பப்ளிக் பிராஸிகியூட்டர்: கொலை! பகிரங்கமாகச் செய்யப்பட்ட கொலை!! துணிவோடு சட்டத்தை துட்சமாக மதித்து செய்யப்பட்ட படுகொலை!!! பக்திமான் வேடம் பூண்டு பாதகச் செயல் புரிந்தவன் இதோ இந்த மூர்த்தி. மூர்த்திதான் கொலை செய்தான் என்பதற்கு ருஜூ சாக்ஷி இருக்கிறது. கொலை செய்ததை அவனே ஒப்புக்கொண்டிருக்கிறான். அதற்கும் சாக்ஷி இருக்கிறது. கொலை செய்த இடத்திலேயே மூர்த்தியை பிடித்துக் கொண்டார்கள். சாக்ஷி உண்டு இதற்கும்.

சேவகன்: சுந்தரகோஷ், சுந்தரகோஷ், சுந்தரகோஷ்

பப்ளிக் பிராஸிகியூட்டர்: மூர்த்தி, ஹரிஹரதாசை கொலை செய்யும்போது கொலை கொலை என்று கூவினது நீர்தானே?

சுந்தரகோஷ்: ஆம், நான் தான்.

பப்ளிக் பிராஸிகியூட்டர்: தோட்டத்துப் பக்கம் இருந்து நீர் பயப்படும்படியாக சப்தம் கேட்டது. யாரோ யாரையோ மிரட்டுவது போலே?

சுந்தர: ஆம், அய்யோ ஏனடா இந்த அக்ரமம், பாவி, என்று குருதேவர் கூறினார்.

260