பப்ளிக் பிராஸிகியூடர்: உடனே தோட்டத்துப் பக்கம் ஓடினீர்?
சுந்தரகோஷ்: ஆம், அப்போது மூர்த்தி குருதேவரின் கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன்; கொலை, கொலை என்று கூவினேன், ஆஸ்ரம வாசிகள் ஓடிவந்து பிடித்துக்கொண்டார்கள்.
பப்ளிக் பிராஸிகியூட்டர்: யாரை?
சுந்தரகோஷ்: மூர்த்தியை.
பப்ளிக் பிராஸிகியூட்டர்: அப்போது குரு மாண்டுபோய் விட்டார்?
சுந்தரகோஷ்: ஆம். மூர்த்தி அப்போது பக்கத்திலேயே இருந்தான்.
பப்ளிக் பிராஸிகியூட்டர்: குருவின் கழுத்தை மூர்த்தி நெரித்ததை நீர் பார்த்தீர்?
சுந்தரகோஷ்: ஆம், பார்த்தேன்.
பப்ளிக் பிராஸிகியூட்டர்: தேட்சால் மி லார்டு.
வடநாட்டு வக்கீல்: உமது பெயர்?
சுந்தரகோஷ்: சுந்தரகோஷ்.
வடநாட்டு வக்கீல்: ஆஸ்ரமத்தின், பூர்வாசிரமப் பெயர்?
சுந்தரகோஷ்: சுந்தர்......சுந்தரம்.
வடநாட்டு வக்கீல்: சரி, சுந்தரகோஷ், குருதேவர் கொலை செய்யப்படுவதை நீர் பார்த்தீர்?
சுந்தரகோஷ்: ஆம்.
வடநாட்டு வக்கீல்: கொலை செய்து கொண்டிருக்கும்போதே பார்த்தீர்?
சுந்தரகோஷ்: ஆம், பார்த்தேன்.
வடநாட்டு வக்கீல்: ஆனால் அதைத் தடுக்க எந்தவித முயற்சியும் செய்யவில்லை. ஏன்? மூர்த்தி குருதேவரை தாக்குகிறான்; அதை நீர் பார்க்கிறீர், அவன்மீது பாய்ந்து அவனைக் கீழே தள்ளி குருதேவரைக் காப்பாற்ற வேணுமென்று உமக்குத் தோன்றவில்லை, ஏன்? குருதேவர் கொலை செய்யப்படும்போது,
261