மூர்த்தி: இல்லை, இல்லை; உன்னைப் பார்க்கும்போதெல்லாம் என் அமிர்தத்தைப் பார்ப்பது போலவே இருக்கிறது.
சுகிர்: எப்படி இருப்பாள் அந்த அமிர்தம்?
மூர்த்தி: சுருக்கமாகச் சொல்கிறேன்; நீ பாலு முதலியாரின் மகளாகி, பட்டுப் பட்டாடை உடுத்தி, படாடோபம் இல்லாமல், பட்டிக்காட்டுப் பார்வையில் ஏழ்மையின் தோழமை கொண்டிருந்தால் எப்படி இருப்பாயோ, அப்படி இருப்பாள் என் அமிர்தம்.
காட்சி 54
இருப்போர்:—ஆனந்தன், வேதாசல முதலியார், மூர்த்தி, மணி, பாலு, அமிர்தம், சரசா.
ஆனந்: மணி, கலியாணம் என்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும்? ஊரிலே ஆயிரம் நடக்கிறது. என்ன பிரயோஜனம்.
வேதா: ஹும், ஆரம்பமாயிற்றுதுங்க. ஆனந்தனுடைய அர்ச்சனை. என் மனதை புண்படுத்துவதற்காகவே இவன் பூமியிலே பிறந்திருக்கிறான் போலிருக்கு.
ஆனந்: உமது புண் ஆறாமல் இருக்கவேண்டும் என்பதுதானே என் ஒரே ஆசை.
பாலு: இந்தாப்பா ஆனந்தா, உன் மாமனார் உனக்கு என்ன கெடுதல் செய்தார். அதை என்கிட்ட சொல், நான் கேட்கிறேன்.
ஆனந்: மாமா! உன்னை மாமா என்று அழைக்க என் வாய் கூசுகிறது.
மூர்த்தி: ஆனந்தா, போதும் அதிகமாய்ப் பேசாதே. உனக்குப் பெண் கொடுத்துவிட்டதாலே நீ செய்கிற அக்கிரமங்களை எல்லாம் பொறுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்கிற விதி இல்லை. இனி பொறுக்க முடியாது. தெரிகிறதா?
268