ஆனந்: துள்ளாதே மூர்த்தி. உன் கள்ளக் காதல் கைகூடி விட்ட சந்தோஷத்தில் துள்ளுகிறாய். மூர்த்தி, என்னைப்போல் துன்பத்தைக் கண்டிருந்தால் தெரியும். சீமானின் மகன். சொகுசாக வாழ்ந்தாய் என் சஞ்சலத்தை நீ அறிவாயா? பசி உனக்குத் தெரியுமா? பட்டினி கிடந்தது உண்டா? பகலெல்லாம் வேலை செய்து அலுத்து இரவிலே தூக்கம் பிடிக்காமல் புரண்டதுண்டா? மூர்த்தி நீ புத்தி உள்ளவன். கேள் என் கதையை, கேட்டபின் யோசித்து பதில் சொல். நான் யார்? மேவார் விலாச மைனர் சரசாவின் புருஷன், ஜமீன் வேதாசலத்தின் மருமகன் என்று தானே நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். மணி, ஊருக்குள்ளே எனக்கு என்ன பெயர்?
மணி: என் சிநேகிதன் என்றால் அதிலே சகலமும் அடக்கம். ஊருக்குள்ளே உனக்கு என்னப்பா பெயர். குடிகாரன், சூதாடி, கூத்திக்கள்ளன்.
ஆனந்: ஆம், குடியன், வெறியன், கூத்திக்கள்ளன், மனைவியை கொடுமை செய்தவன், மாமனாரின் மனதை நோகச் செய்த மகா பாதகன்; இவ்வளவும் ஏன் செய்தேன் தெரியுமா? வேதாசலத்திற்கு வேதனை தருவதற்குத்தான். ஏன் திகைக்கிறீர்கள். உண்மையின் உருவம் பார்ப்பதற்குப் பயமாயிருக்கிறதோ? அன்று கோர்ட்டிலேயும் எப்படித்தான் சகித்துக் கொண்டிருந்தீர்களோ?
பாலு: ஆனந்த், என்ன, நீ அன்று கோர்ட்டில் இல்லையே.
ஆனந்: ஆம், கோர்ட்டிலே நான் இல்லைதான். மூர்த்திக்காக வாதாடிய வக்கீல் இருந்தாரல்லவா? பாருங்கள் அவரை. (திரையைத் தள்ளுகிறான்) நான்தான் மூர்த்திக்காக வாதாடிய வக்கீல். என் நண்பர் மணிதான் ஆஸ்ரமத்து உண்மைகளை அறிந்து சொன்னவர்.
மூர்த்தி: ஆனந்த், நீயா என்னைத் தூக்கு மேடையிலிருந்து காப்பாற்றினாய், நீயா வடநாட்டு வக்கீல், உனக்கா என் மீது இரக்கம் பிறந்தது?
ஆனந்: படித்த முட்டாளே! கேள். இலங்கை தோட்டத்திலே இரவு, பகலாக வேலை செய்து 200 ரூபாய் சேர்த்து அதைத் தன் வயோதிகத் தந்தைக்குத் தந்து அவர் மகிழ்வதைக் கண்டு மகிழவேண்டும் என்று எண்ணியே, ஈனம், பச்சாதாபம், அன்பு ததும்பிக்கொண்டிருந்த மனந்தாண்டா இது. பாடுபட்ட கைகளடா. காடு மேடு சுற்றிய கால்கள். உழைத்து, உழைத்து உருக்குலைந்தவன் நான். உன்னைப்போல் உல்லாசபுரியில்
269