உலாவியவனல்ல. படித்து, பட்டம் பெற்று, வேலை கிடைக்காததினால் சிலோன் காட்டிலே கணக்கெழுதப் போன ஆனந்தன் நான். என்னை மேவார் விலாச மைனர் என்று எண்ணிக் கொண்டு சரசாவை எனக்கு கலியாணம் செய்து தந்தார் சீமான் வேதாசலம். உன் சகோதரி சரசாவை ஏன் கலியாணம் செய்து கொண்டேன்? உன்னைப்போல் காதலுக்காகவா? இல்லை. சீமானின் பணத்திற்காகவா? கடுகளவும் இல்லை. சரசாவை நான் கலியாணம் செய்துகொண்டது துரோகமரின் விஷத்தைக் கக்குவதற்கு. உன் தகப்பனார் பணத்தாசை பிடித்து பல ஏழைகளைக் கசக்கிப் பிழிந்தார். அப்படி அவதிப் பட்டவர்களிலே என் தந்தையும் ஒருவர். பக்கத்து ஊர், சுந்தரம் பிள்ளை என்று பெயர். பட்ட கடனுக்காக வீடும், தோட்டமும், உன் தகப்பனாருக்குக் கொடுத்தார். பராரியானார். வீடு இழந்த என் தந்தையை ஜெயிலிலே தள்ள இந்த தயாளமூர்த்தி ஏற்பாடு செய்தார். பாவம்! ஏழை என்ன செய்ய முடியும். மரக்கிளையிலே பிணமாகத் தொங்கினார். என் தந்தை பிணமாகினார். என் தந்தையைக் கொன்ற பாதகனை நான் கொடுமைப் படுத்தியது குற்றமா? சரசா நீ சொல். உன் தந்தையை நான் கொடுமைப் படுத்தியது குற்றமா? மூர்த்தி நீ பேசு. உன் தந்தையைக் கொடுமைப் படுத்தியது குற்றமா? பாலு முதலியாரே, நியாயம் தெரியுமே உமக்கு, நீர் சொல்லும். வேதாசல முதலியாரை நான் கொடுமைப் படுத்தியது குற்றமா? வேதாசல முதலியாரே! என்னைப் பார்க்க கூசுகிறதோ! நீரே சொல்லும், உம்மை நான் கொடுமைப் படுத்தியது குற்றமா?
வே: ஐயோ, என்னால் இதைத் தாங்க முடியவில்லையே.
ஆன: இப்படி நான் எத்தனை ஆயிரம் தடவைகள் சொன்னேன் தெரியுமா? மரக்கிளையிலே பிணம் தொங்கும்போது, அப்போதே உம்மைக் கொன்று இரத்தத்தைக் குடித்திருப்பேன்.
மணி: நான்தான் அதைத் தடுத்தேன். நான்தான்.
பாலு: அப்பா மணி, நல்ல சமயத்திலே நீ நல்ல புத்திதான் சொல்லியிருக்கிறே.
மணி: பாருங்க, பாம்பு கடிச்சா பட்டுண்ணு உயிர் போயிடும். அதனால் ஒரு பயனுமில்லை, தினமும் படுக்கையிலே போய் படுக்கணும். பாம்பு வரணும், கடிக்கணும், உயிர் துடிக்கனும். ஆனால் பிராணன் மட்டும் போகக் கூடாது. அதைப் போலே உன் தகப்பனைக் கொன்ற சண்டாளனை வாட்டி, வாட்டி, வதச்சி, வதச்சி சித்ரவதை செய்யனும்னு நான்தான் யோசனை சொல்லிக் கொடுத்தேன்.
270