உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரங்: எதுக்கு?

ராக: ஜனங்களோட க்ஷேமத்துக்குத்தான்.

ரங்: என்னது அது.....

ராக: ஸ்ரீமத் ராமாயண காலட்சேபம் ஏற்பாடு செய்துடுவோம்—ஆறு மாதம்—சித்ரகூடப் பாகவதர்னு கேள்வியுண்டோ, மகா சிலாக்யமான உபன்யாசம்......

ரங்: யாரு? யாரோ, உங்க பந்துன்னு சொல்வாங்களே.....

ராக: ஆமாம்......கலெக்டராகப் போயிருக்கவேண்டியவர், எம்.ஏ.பி.எல்............

ரங்: கேள்விதான்.....ரிவின்யூ இலாக்காவிலே இருக்கச்சே என்னமோ இரண்டு மூணாயிரம் கையாண்டதாக......

ராக: பழி சுமத்தினா, மகாபாவிகள்! கேஸ் நடத்தியிருந்தாரானா, ஜெயம்தான், ஆனா, என்ன செய்தார் தெரியுமோ? ராமா! இது உன்னோட சோதனைடாப்பா! இதோ வந்துட்டேன் உன் சேவைக்குன்னு சபதம் செய்துண்டு வாயைத் திறவாமப்படிக்கு மூவாயிரத்தையும் கட்டிவிட்டார். கட்டிவிட்டா விட்டு விடுவாளோ, ஜெயிலுக்குத்தான் அனுப்புவான்னு கண்டவா கண்டபடி பேசினா. ஆனா ராமானுக்ரஹம்னா என்ன சாமான்யமா! மேலதிகாரிகள் வழக்கை வாபஸ் வாங்கிண்டா. பார்த்தீரோ ராம நாம் மகிமையை.....

ரங்: அவருடைய கதா காலட்சேபம் வைத்தா நல்லது என்கிறீரா....

ராக: ஏற்பாடு செய்துவிட்டேன் முதலியாரவாள்! அடுத்த புதன் இங்கே வர்ரார்......

ரங்: அப்படியா......சரி......

ராக: மொத்தமா ஆயிரத்தொண்ணு.......

ரங்: ரூபாயா?

ராக: பவுன்கூடத்தான் தரலாம்.....ஆனா முடியுமோ.....

ரங்: எங்கே முடியுது. நான் பாருங்க நம்ம கிராமத்திலே துரோபதை அம்மன் திருவிழாவிலே பாரதம் படிக்கறதுக்கு, நம்ம படவேட்டராயர் இருக்காரே, அவரை ஏற்பாடு செய்து

288