விட்டு, இப்ப படாதபாடு படறேன். ஒரு பயலும் காசு தர மாட்டேன்கிறான். பூராச் செலவும் நம்ம தலைலேயே விழுந்தது, ரொம்பச் சிரமமாயிட்டது.......
ராக: பாரதம் புண்ய கதைதான்...ஆனாலும்...
ரங்: இராமாயணம்மாதிரி ஆகாது என்கிறீர். ஆமாம், சந்தேகமென்ன, எதோ என் சக்த்தியானுசாரம் நான் பாரதம் ஏற்பாடு செய்தாச்சி, நீங்க உங்க சக்திக்குத் தகுந்தபடி, ராமாயணம் நடத்தி வையுங்கோ. இப்படி நாம், ஆளுக்கு ஒரு காரியமா ஏத்து நடத்தினாத்தான், கட்டிவரும். நான் புறப்படட்டுங்களா, நாளை மறுநாள் தீ மிதிக்கிறது—விறகுக் கடை பக்கம் போகணும்...
ராக: சரி......
அமளிக் காண்டம்
காமாட்சி: காயா பழமா?
ராகவாச்சார்: அவனண்டை போனா பழம்கூட அழுகின்னா போயிடும். கொடாகண்டனாச்சே......
கா: விடியாமுஞ்சி வேலைக்குப் போனா, எப்படி ஜெயம் கிடைக்கும்னேன். உமக்கு எங்கே வரப்போறது, சாமர்த்யம்.
ராக: சும்மா கிடடி! நான் நாலு நாழியாப் பேசி, அதைச் சொல்லி இதைச் சொல்லி, ராமாயணம் வைக்கலாம்னு சொன்னா, அவன், நான் ஏற்கனவே கிராமத்திலே பாரதம் நடத்தறனேன்னு, சொல்லி விரட்டறான்.
கா: இருந்தா என்னடாப்பா! உன்னோட செல்வத்துக்கும் வருமானத்துக்கும் இதெல்லாம் ஒரு பெரிய காரியமா, உன்னைப் போன்ற லட்சுமி புத்ரா இப்படிப்பட்ட காரியத்தைச் செய்யாமப் போனா, வேறு யார் முன்வருவா, அப்படி இப்படின்னு, மனசு இளகறமாதிரியாப் பேசணும்.....உமக்கு எங்கிருந்து வரப்போறது...மூஞ்சியையும் முகரக் கட்டையையும் பார்க்கிறபோதே, கதவை இழுத்துத் தாள்போட்டுடறா.......
37
289