சாரு: ஏண்டி! கமலா! சில பேர் கர்மிகளாத்தான் இருப்பா! ராம காரியத்துக்குத் தர மனசு வராது, இன்கம் டாக்சுக்குக் கொட்டிக் கொடுப்பா......
ரங்: என்னோட மனசு, பெரிசு......இப்ப காலம் கொஞ்சம் கஷ்டமானது.....
கம: எல்லோருடைய கஷ்டமும் போறதுக்குத்தானே ராமாயணமே......
ரங்: ஆமாமாம்!
கம: பகவானோட காரியத்துக்கு தயக்கமே இருக்கப்படாது......
ரங்: சந்தேகமென்னங்க....ஒரு இரநூறு எழுதிடட்டுங்களா.....
கம: உங்க இஷ்டம்......
ரங்: அதிகம் செய்கிறவன்தான் இப்ப கொஞ்சம் தொந்தரவு......எல்லாம் ஆபீசரய்யாவிடம்தான் இருக்கு நம்ம கணக்குப் புத்தகம் ஜாடாவும்......
கம: ராமனிருக்கார் போங்க உங்க பங்கிலே.....ஆபீசர் சத்யசந்தர்......பக்திமான்களிடம் பொகுப் பிரீதி......முன்னூறு எழுதுங்க......
ரங்: சரிங்க......தடை சொல்வேனுங்களா......... கணக்கப் பிள்ளே! மூணு.....ஆமாமாம்.....உள் அலமாரியிலே......கொண்டு வா...... கலர் சாப்பிடுங்க......