பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஏன் திகைக்கிறாய்? ஆபத்தானது வெடிமருந்து. ஆனால் கொஞ்சம் தண்ணீரை அதிலே ஊற்றிவிடு, ஆபத்து வராது. சு: விஷயத்தைச் சொல்லுங்கள்... ஜெ : மாமா, என்று சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக் என்று எண்ணிக் கும். பரவாயில்லை. வெட்கம் கொள்கிறேன். சு: அந்த இரகசியம்... ஜெ இருக்கும் என்னிடம் எப்படிக் கிடைத்தது என்று கேட்கிறாயா? (தேவர் ஜெகவீரன் கையைப்பிடித்து இழுக்கிறார்.] ஜெ: (தேவர் பக்கம் திரும்பி) சொல்லி விடமாட்டேன் பயப் படாதீர்! சுசீலா! என்னிடம் விலையுயர்ந்த வைரம், பார்த்தால் பிரமிக்கச் செய்யும் பச்சை, வையகமே புகழும் வைடூரியம்... க: கோமேதகம், முத்து, நவரத்னங்களும் இருக்கின்றன. நான் கேட்பது என்ன நீர்.பதில் சொல்வது என்ன? ஜெ: பொருத்தமில்லாமல் நான் பேசமாட்டேன் சுசீலா! அந்த நவரத்தினங்கள் எனக்குக் கிடைத்தது போல இந்த இரகசியமும் கிடைத்தது. வைர மாலையை நான் உனக்குத் தந்து நீ உன் வசீகரமான கழுத்திலே அதை அணிந்து கொண்டால், ஊரர். அந்த வைரம் எப்படி ஜெமீன்தாரருக்குக் கிடைத்தது என்றா கேட்பர். எவனாவது மடையன் கேட்டாலும், நானா பதில் சொல்வேன். சு: இரகசியம் எப்படி உமக்குக் கிடைத்தது என்பதைக் கூறமுடியாது. அதற்குத்தானே இவ்வளவு பேச்சும். ஜெ: ஆமாம்! அதையேதான் நாசுக்காகச் சொன்னேன். எப்படியோ கிடைத்தது அந்த இரகசியம். கலியாணமானவுடன் அந்த இரகசியம் உன்னிடம் தரப்படும். நீ என்ன வேண்டு மானாலும் செய்யலாம். கலியாணம் இல்லை-உலகுக்கு அது தரப்படும். நீ பிடிவாதம் செய்துகொண்டே காலம் கடத்திவந்தால், சாகசம் செய்தால், ஜெகவீரனை ஏமாற்ற நினைத்தால், சுசீலா! (குரலை மேலும் மேலும் உயர்த்திக் கொண்டே, அவள் அருகே போய்நின்று, குரூரமான பார்வையுடன்) அந்த இரகசியம் அரசாங்கத்திடம் போய்ச் சேரும். அதற்கான முன்னேற்பாடு என் வக்கீலிடம் இருக்கிறது. [உரத்த குரலில் சிரித்துவிட்டு )

26

26