பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஒருவேளை, அவன் இறந்துவிட்டாலும் சாபம் இருக்குமோ? தன் ஆசை நிறைவேறாத முன்பு சாக நேரிட்டால், அப்பாவைத் தூக்குமேடைக்கு அனுப்பக்கூடிய அந்த இரகசியத்தை வேறு யாராவது உபயோகித்துக்கொள்ள ஏற்பாடு இருக்குமோ? அவன் கல்செஞ்சக்காரன் மட்டுமல்லவே- நயவஞ்சகனாயிற்றே. (கைகளைப் பிசைந்து கொண்டு) என்ன ஏற்பாடு செய்து வைத்திருக்கிறானோ? (கொஞ்ச நேரம் யோசனை செய்துவிட்டுக் கீழே செல்கிறாள்.) காட்சி 14 இடம் :- தேவர் மாளிகைக் கூடம். இருப்போர்:-ஜெகவீரர்,தேவர். (தேவர், மேஜைமீது தலையைக் கவிழ்த்துக்கொண் டிருக்கிறார். ஜெகவீரன் நாற்காலியில் சாய்ந்து கொண்டு, கால்களை மேஜைமீது போட்டுக் கொண்டு அட்டகாசமாக இருக்கிறான். சுசீலா வருகிறாள்.] ஜெ: சுசீலா! (தேவர் திடுக்கிட்டுத் தலையை நிமிர்த்தி சுசீலாவைப் பார்க்கிறார்.] சு: நான் பலியான பிறகு, தாங்கள் சொன்ன அந்தச் சாபம் கட்டாயம் நீங்கிவிடுமா அப்பா! தே: (ஒன்றும் புரியாமல்) தங்கமே! என்ன கேட்கிறாய்? ஜெ: நான் சொல்கிறேன் சுசீலா! உன் எழுந்து கெம்பீரமாக பேசுகிறான்.] தகப்பனாரைத் தூக்குமேடைக்கு உலவிக்கொண்டு அனுப்பக்கூடிய [சுசீலா திகைப்பதுகண்டு] 25

இரகசியம் என்னிடம் இருக்கிறது.

25