பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கொண்டது. அப்பா! அதனால்தான் அவனைக் கண்டு நடுங்கு கிறார். பதைபதைத்து என்ன மர்மம்? அது என்ன பயங்கர இரகசியம்? தெரியவில்லையே! (தாயார் பவானியின் படத்தைப் பார்த்து] அம்மா! அம்மா என்னைப் பலி கேட்கும் அந்தப் பயங்கர இரகசிம் என்ன? [கண்ணாடியில் தன் உருவம் தெரியக் கண்டு) என்னை அழிக்கும் அழகே! இம்சைக்கு என்னை ஆளாக்கும் இளமையே! நாசமாகட்டும்! இந்த அழகு. (புஷ்பத்தை வீசி எறிகிறாள்.] [மறு விநாடி] ஐயோ! அழகு என்ன செய்யும்? குணசீலரான சேகரை என்னிடம் அந்த அழகல்லவா அழைத்துக்கொண்டு வந்தது? அவருக்கு நான் அர்ப்பணித்துவிட்ட பொருள் அல்லவா இந்த அக்கு. மலர் முகம் என்று கூறுவார்; மந்தியிடம் தரச் சொல்கிறார் தந்தை ; தராவிட்டால் தனக்கு மரண தண்டனை தருவார்களாம். அது சாபமாம் ! ஐயோ ! அது என்ன சாபம் ! ந் அத்தச் சண்டாளன் ஏன் அப்பாவின் உயிரைத் தன் கரத்தில் வைத்துக்கொண்டு வதைக்கிறான். அவன் ஒழிந்தால்! (முகத்திலே முதலில் பயம். பிறகு தெளிவு உண்டா கிறது.) அவன் ஒழிந்தால் அப்பாவுக்கும் ஆபத்து இல்லை. என் வாழ்க்கையும் பாழாகாது. கொலைதான்! செய்தால் என்ன? அவன் சாகாவிட்டால் மூன்று உயிரல்லவா வதைபடும். ஆமாம்! என்னை மண அறைக்கு அழைக்க வந்தவனை பிணமாக்குகிறேன். [மேஜை அறையைத் திறந்து, ஒரு பொட்டலம் எடுத்து, விஷ மருந்தைப் பாலிலே கலந்து விடுகிறாள்.] மையல் கொண்டுள்ள அந்த மடையனிடம் இதைத் தந்தால் போதும் ....ஆனால்.... அந்தப் பரங்கர இரகசியம்? 24

[யோசிக்கிறாள்]

24