பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தே: (கலங்கி) காரித்துப்பும் -கல்லை வீசும். ஜெ: குடும்ப சாபம் உண்டாகும். பரம்பரைக்கே பழிச் சொல். தேவரே! நானொன்றும் குஷ்டம் பிடித்தவனல்ல, என்னைக் கலியாணம் செய்துகொண்டால், இந்த ரூபவதிக்கு ஒன்றும் பங்கம் வந்துவிடாது. இதற்கு இணங்காவிட்டால் இழிவும் பழியும் உமது பிணத்துக்கு ஆலவட்டமாக இருக்கும். சு: அப்பா! மாமா! ஆண்டவனே! என்ன இது? தூக்கு மேடை பிணம்! சாபம்! ஒன்றும் புரியவில்லையே. தே: (தடுமாற்றத்துடன்) 'என்னை-என்னைமட்டுமல்ல-நமது குடும்பத்தை - பின் சந்ததியைக்கூட, ஒரு கொடிய சாபம் தீண்டு வதற்குத் தயாராகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. சு: சாபமா? கட்டுக்கதை பேச இதுவா அப்பா சமயம்? ஜெ: கட்டுக்கதையுமல்ல, மனப்பிராந்தியுமல்ல. வேண்டு மானால் தான் புரிகிறபடி கூறுகிறேன் கேள்......... தே: (ஜெமீன்தாரரைப் பார்த்து) வேண்டாம், வேண்டாம். என் தாய் என்னைக் காப்பாற்றுவாள் -- கைவிட மாட்டாள். [சுசீலாவைப் பார்த்து] மகளே! அந்தச் சாபத்தைப் போக்கிக்கொள்ள ஒரு பலி தந்தாக வேண்டும். சு: (ஆழ்ந்த சோகத்துடன் ) அந்தப் பலி நானா? தே: ஆமாம். Fr: சரி. ஜெ: சபாஷ் ! தேவரே ! சபாஷ்! காட்சி 13 இடம்:- சுசீலா அறை. இருப்போர்:-சுசிலா. [சுசிலா தனிமையாகத் தேம்பித் தேம்பி அழுகிறாள்.] சு: அந்தப் பாதகனிடம் என் தகப்பனாரின் உயிரையும் மானத்தையும் அழிக்கக்கூடிய ஏதோ ஓர் இரக்சியம் சிக்கிக்

23

23