பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சு: அப்பா பயங்கரமாக இருக்கிறதே. தே: சுசீலா கண்ணே! உன்னை நான் உண்மையாகவே சொத்து ஜெமீன்தாரனுக்குப் போய்விடுமே என்ற பயத்தினாலே அல்ல அம்மா வற்புறுத்துகிறேன். மகளே! நான் அப்படிப்பட்ட பணப்பித்துப் பிடித்தவனல்ல, உன்னைவிட எனக்குச் செல்வம் பெரிதல்ல. சு: வேறே என்ன காரணம் அப்பா. ஜெ: சத்தியம் செய்து கொடுத்துவிட்டார். சு: திருமணம் எனக்கு, அதற்கான சத்தியம் அவர் செய்தால் அதிலே அர்த்தமில்லை. தே: சுசீலா! உனக்கு விளங்கும்படி கூறுவதற்கில்லை. தூக்குமேடைக்கு நான் போகட்டுமா, அல்லது திருமணப் பந்தலுக்கு ஜெமீன்தாரருடன் நீ போகிறாயா? இரண்டில் ஒன்று சொல்லு. சு: (திகிலுடன்) என்னப்பா அது? தூக்கு மேடையா? ஏன். தே: அம்மா! சுசீலா! என்னைப் பார்த்தால் தெரிய வில்லையா? நான் சித்திரவதை செய்யப்படுகிறேன். என்னால் சகிக்க முடியாது. தலையிலே மோதிக்கொள்கிறார் - அலறி அழுகிறார். மயங்கி நாற்காலியில் சாய்கிறார். சு: அப்பர், அப்பா! [ ஓடிச் சென்று கொஞ்சம் தண்ணீர் கொண்டுவந்து முகத்தில் தெளித்து, மயக்கத்தைத் தெளிய' வைத்து, ஜெமீன் தாரைப் பார்த்து) கொட்டிவிட்ட பிறகு, தேளாவது ஓடி ஒளியும். அவரைத் துடிக்கச் செய்துவிட்டுத் தைரியமாக எதிரே உட்கார்ந்து கொண்டிருக்கிறாயே. பவானி ! (மயக்கம் தெளிந்த தேவர்] பவானி! போதும் என்னை நீ பழி தீர்த்துக் கொண்டது. பாவி நான் இந்த க்ஷணம் இறந்தாலும் பரவாயில்லை. இந்த நிலைமையைவிட, அது எவ்வளவோ நிம்மதியாக இருக்கும். ஜெ: தூக்கு மேடையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் தேவரே! ஆனால் உலகம் உமது பிணத்தின்மீது........

22

22