பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கண்ணே! சுசீலா! உன் இஷ்டப்படி எல்லாம் நான் நடந்து வந்தேன். உன் மனம் நோகும்படி இதுவரை நடந்து கொண்ட துண்டா? சுசீலா! தங்கமே! எனக்கு நீ தவிர வேறு யார் ? சு (திகைப்பும் பரிதாபமும் மேலிட்டு) அப்பா! அவருடைய மிரட்டலுக்கு ஏன் பயப்படுகிறீர். மாமாவைச் சமாதானப் படுத்துவது முடியாத காரியமா? ஏன் அவரிடம் அவ்வளவு பயப்படுகிறீர்? அவர் என்ன செய்துவிடுவாரப்பா. அவர் ஜெமீன்தாரராக இருந்தால் நமக்கென்ன? நாமென்ன அவர் வீட்டுக் காவலாளியா? ஜெ: கடனாளி ! ஆணவம் பிடித்தவளே. இந்த ஜெக வீரரின் பேனா முனை அசைந்தால், இந்த மாளிகை, தோட்டம், வண்டி, வாகனம், உன் ஒய்யார வாழ்வு, யாவும் பஞ்சு பஞ்சாகப் பறந்துவிடும். நிலைமை தெரியாமல் தடுமாறுகிறாய். சு: அப்பா, அப்பா! அதற்காகவா அப்பா! பயப்படுகிறீர். கடனுக்காக நமது சொத்து பூராவையும் இந்தக் கிராதகனிடம் கொடுத்துவிடப்பா. உலகம் மிகமிகப் பெரிது அல்லவா ? இதிலே எல்லோருமா ஜெமீன், மிட்டா, மிராசுடன் வாழ்கிறார்கள். அப்பா, செல்வத்தை இழக்க நேரிடுகிறதே என்று கலங்கி என்னைப் படுகுழியில் தள்ளாதீர். (வருத்தத்துடன்) எனக்கு ஆறுதல் மொழி கூற என் தாயும் இல்லை. அப்பா! நீரேதானே எனக்குத் தாயும் தகப்பனும். தே: ஐய்யோ ! நெஞ்சு வெடித்துவிடும் போலிருக்கிறதே. நான் என்ன செய்வேன்? உன் தாய் இருந்திருந்தால் இந்த ஆபத்து வராதே. சு: (பயந்து) என்ன ஆபத்து? சொத்து போய்விடுவதா ஆபத்து? சிறு குழந்தைபோல அழாதீர் அப்பா? தே: சுசீலா ! பேசுவது உன் தகப்பனல்ல. தள்ளாத வயதிலே புலியால் துரத்தப்பட்டு உயிருக்குப் பயந்து ஓடி வரும் ஒரு துர்ப்பாக்கியன் உன்னைக் கெஞ்சுகிறான். உன் காலில்... [மண்டியிட முயற்சிக்கிறார், அவள் துடித்து அவரைத் தூக்கி நிறுத்துகிறாள்.] சு: ஐயோ! அம்மா! அப்பா! நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன். தே: (பரிதாபப் பார்வையுடன்) அம்மா! எனக்கு உயிர்ப் பிச்சை தா

21

21