பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

த: போக்கிரிப் பெண்ணே! என் உயிருக்கு உலை வைக் கிறாயே. நான் என்ன செய்வேன். ஜெ: பிடித்தால் பொடிப் பொடியாவாள். இந்த அகம் பாவக்காரியை, இவள் அழகுக்காக அல்ல, என் அக்காவிடம் கொடுத்த வாக்கை காப்பாற்ற அல்லவா நான் கலியாணம் செய்துகொள்ள வேண்டி இருக்கிறது. அழகாம் அழகு. ஆயிரம் அழகிகள் என் அடிவருடக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். தே: கோபிக்காதீர். சிறு பெண். மேலும், சொந்த மாமன் தானே என்று பேசிவிட்டாள். திருமணம் நடப்பது உறுதி. ஜெ (குரூரமான பார்வையுடன்) விவாக வகைகளிலே, காந்தர்வமும் ஒன்று. 5: (கோபத்துடன்) ஆனால், அது இங்கே கிடையாது. ஜெ: (ஆத்திரத்துடன்) அதைப் பார்த்துவிட்டுப் போகத் தான் வந்தேன், உன்னை தே: (பொறுமை இழந்து) ஏ! சுசீலா! அளவுக்கு மீறிப் போகாதே. நீ என்ன பிடிவாதம் செய்தாலும் சரி. ஜெமீன்தாரர் ஜெகவீரருக்குத்தான் கலியாணம் செய்து தீருவேன். இதை யாரும் மாற்ற முடியாது. [கோபம் தணிந்து சோகக் குரலில் ] நாளைக் காலையிலே நீ சம்மதம் தெரிவிக்காவிட்டால், மறுபடி யும் என்னை உயிருடன் காணமாட்டாய். சு: (திடுக்கிட்டு) அப்பா! தே (சோகம் கப்பிய குரலில்) நீ என் மகளா ? அல்லது என்னை மாய்க்க வந்த மாபாவியா என்பதை உன் செயலால் காட்டு. சு: ஏனப்பா,எல்லாம் தெரிந்திருந்தும் இப்படிப் பேசுகிறீர். (தலை குனிந்தபடி) நான் டாக்டர்......... தற் தே: சேகரனைக் காதலிக்கிறாய் ; தெரியும் ; சேகர் நல்லவன், தெரியும்.(ஈனக்குரலில்) ஆனால் உன் தகப்பனாரின் கொலைக்குப் பிறகுதான் அவனை நீ கலியாணம் செய்து கொள்ள வேண்டி வரும். [ அருகே சென்று அபயம் அளிக்கும்படி வேண்டும் பாவனையில் நின்றுகொண்டு}

20

20