உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாழடைந்த சாவடி

[சாலை ஓரத்தில் உள்ள சற்று கலனான சாவடியில் அழுக்கேறிய உடையணிந்த ஒருவன் படுத்துப் புரண்டு கொண்டிருக்கிறான்...தூக்கம்வரவில்லை. மடத்து, பண்டாரங்கள் இருவர், ஏதோ பேசிக் கொண்டு அவ்வழியே வருகிறார்கள்.]

ஒருவன்: திட்டம் நன்றாகத்தான் இருக்கு...வெற்றி கிட்டினால் தானே......

மற்றொருவன்: வேலை செய்தால்தானே வெற்றி கிடைக்கும்...

ஒரு: வேலையும் சீக்கிரம் நடந்தாகவேண்டும்......

[சாவடிப்படியில் உட்காருகிறார்கள்]

மற்: கண்மூடி மக்கள்—கொட்டித் தருகிறார்களே, கேட்கும் போதெல்லாம்......

ஒரு: நாம்தான் மிரட்டுகிறோமே......நரகம் என்று......

மற்: எல்லோரும் அல்ல....தொகை குறைந்துகொண்டே வருகிறது......

ஒரு: பக்தர்கள் தொகை குறைந்துவிட்டால் பிறகு அது நமக்குத்தானே நஷ்டம்.....

மற்: (ஆயாசத்துடன்) நமச்சிவாயம்....நமச்சிவாயம்!....மடமும் இருக்கவேண்டும்.....அவனும் தொலைய வேண்டும்....அதற்கு உன் திட்டம்தான் சிலாக்யமானது......(சுற்று முற்றும் பார்க்க, படுத்துப் புரண்டபடி இருப்பவன் தெரிகிறான் உற்றுப் பார்க்கிறான்—மீண்டும் மீண்டும் பார்க்கிறான்—கூட இருப்பவனை அழைத்துக் காட்டுகிறான்—இருவரும் படுத்திருப்பவன் அருகே சென்று உற்றுப் பார்க்கிறார்கள்...ஆச்சரியத்துடன்.)

ஒரு: சரியான பாத்திரம்......!

மற்: (படுத்திருப்பவனைப் பார்த்தபடி) திட்டம் பலித்தது....வெற்றி.....நிச்சயம்.

38

297