உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
[தட்டி எழுப்புகிறார்கள். கண் விழித்து அவர்களைப் பார்த்துவிட்டு]

படுத்: காவி உடை கண்டதும் கன்னத்தில் அடித்துக் கொள்ளும் கபோதி நானல்ல....போங்கள்.....போங்கள்.....

ஒரு: (மற்றவனைப் பார்த்து) இவனே சரியான ஆயுதம் மடத்தானை ஒழிக்க.....

படுத்: என்ன உளறல் இது......ஆயுதமாம் ஒழிப்பதாம்......

மற்: அப்பா......அச்சம் வேண்டாம்.........அரனடியார்கள் நாங்கள் அருளாளர் சீடர்கள்!


படுத்: ஓஹோ! ஜடாமுடிதாரியின் சீடர்களா! வாட்ட வருத்தமின்றி வாழ்வதால் ஓங்கி வளர்ந்திருக்கிறார்கள்.....ஊரார் உழைப்பை உறுஞ்சும் உலுத்தர்களே! நான் ஓர் பாட்டாளி.....ஆனால் ஏமாளியல்ல! உழைப்பாளி.....ஊர் சொத்தைத் தின்று விட்டு ஓம் நமச்சிவாயா என்று கூவிக் கிடப்பவனல்ல; என் முன் என்ன வேலை? வேறு இடம் பாருங்கள்.....

ஒரு: கந்தபூபதி! காரியம் பலித்தேவிட்டது. நம்மவர்களிடம் இவ்வளவு துவேஷம் கொண்டுள்ள இவனே சரியான ஆயுதம்........

கந்தபூபதி: முருகதாசரே! முடித்துவிடலாம்.

[படுத்திருந்தவன் எழுந்து உட்கார்ந்து கோபத்துடன்]

படு: யாரய்யா நீங்கள்.....சாவடியிலே உறங்குபவனைத் தொல்லை தருகிறீர்கள்.

கந்: கோபியாதே அப்பா? நாங்கள் பண்டாரங்கள்.....ஆண்டிகளிடமா ஆத்திரம் காட்டுவது......

படு: ஆண்டிகளாம், ஆண்டிகள்! மோசாண்டிகளே! ஊரிலே எவ்வளவோ மக்கள் உழைத்து அலுத்துக் கிடக்க, உண்டு கொழுத்து ஊன் சுமந்து திரிகிறீர்களே, உங்களுக்கு வெட்கம், மானம் இல்லை!

[இருவரும் கோபம் கொள்ளாமல் களிப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள்.]

கந்: கோபியாதே நண்பா! எமது காவியைக் கண்டு கலங்காதே—! (அருகே உட்கார்ந்து) பொருள் தருகிறோம், வறுமையை ஓட்டிவிடுகிறோம், ஒரு இலட்சம் தருகிறோம்.

298