உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏழைகளுக்கு இதம் செய்யவேண்டும் என்பதற்காக அல்லவா! (சொந்தக் குரலில்) என்று சிவனார் சீற்றத்துடன் கேட்டார். நான் அஞ்சவில்லை.

[பக்தர்கள் முகத்தில் கவலை.]

மடா: காரணம் என்ன? என் மனதிலே இருந்துவந்த கறை—அஞ்ஞானம், என்னைவிட்டு அகலவில்லை. பந்தம், பாசம், பற்று, சுயநலம் இவை என் மனதிலே இருந்துகொண்டு, அஞ்சாதே! அரன் மிரட்டினால் என்ன! உன் உரிமையை இழக்காதே—என்று கூறி என்னை உசுப்பின!

பெரி: சிவனாரிடம் சண்டையா ! சிவ சிவா!

மடா: நான், கர்ம பலன்படி காரியம் நடக்கிறது, கடம்பா, கச்சியேகம்பா, காமாட்சி மணாளா, காலனைக் கொன்றவா!—என்று துதித்தேன். சிவனார், (சிவன் பேசும் பாவனையில்) ஏ! அஞ்ஞான சொரூபமே! என் அடியவனை விட்டு வெளியே, வா!—(சொந்தக் குரலில்) என்று முழக்கமிட்டார்—முக்கண்ணுடையார்.

பக்தர்கள்: ஆஹா.....பிறகு....

மடா: என் தலை சுழன்றது!

பக்: ஐயோ.....பிறகு.....

மடா: மார்பு வெடித்துவிடும் போலாகிவிட்டது!

பக்: அடடா!....பிறகு....

மடா: என்னென்பேன் இறைவனின் திருக்கூத்தை! என் எதிரில் நான் நின்றேன்.

[அனைவரும் திடுக்கிடுகின்றனர்.]

மடா: என்னைப் போன்றே ஓர் உருவம் என் எதிரே நின்றது. பெரிய சுமையைக் கீழே இறக்கிவிட்டவனுக்கு உண்டாகும் ஆனந்தம், எனக்கு! என் எதிரே இருந்த உருவம் உறுமிற்று......நான், பிரபோ! இதென்ன என்று கேட்டேன்.

பக்: சிவனார் என்ன சொன்னார்.........

மடா: (சிவனார் பேசும் பாவனையில்) பாலகா! ஒவ்வொருவர் உள்ளத்திலும் பற்றும், பாசமும், தன்னலமும் உண்டல்லவா? மனிதனின் மனதிலே அஞ்ஞானமும் உண்டு மெய்ஞ்ஞானமும் உண்டு. இரு சக்திகளுக்கும் கடும்போர்—மனம் எனும் களத்திலே! எவனொருவன் அஞ்ஞானத்தை விரட்டி அடிக்கிறானோ

309