பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சேகர்! சேகர்! எங்கே இருக்கிறாய்? பாவம் உனக்கென்ன தெரியும், உன் வாழ்வு அழிக்கப்படுவது. [படுக்கையில் புரண்டு அழுகிறாள் (மீண்டும் எழுந்திருக்கிறாள். மேஜைமீது விஷக் கோப்பை இருப்பது தெரிகிறது.) விஷம் இனி ஏன்? [அதையே உற்றுப் பார்த்துவிட்டுப் புன்சிரிப்புக் கொள்கிறாள்] விஷம் ஏனா? ஏன் உபயோகமாகாது? நான் பலியாகத் தானே வேண்டும். காதலற்ற அந்தக் கலியாணம், என்னை மெள்ள மெள்ளக் கொல்லும் விஷம் -- இது - இப்போதே கொன்றுவிடுமே. [கோப்பையை எடுத்துப் பார்த்துவிட்டு) ஆனால் சேகர்! ஐய்யோ! சேகர்! நமது காதல் ராஜ்யம் அழிந்துவிடுகிறதே. உன் இருதயத்துக்கு ஜோதி என்று சொல்வாயே, இதோ உன் ஜோதி, அணைந்துவிடப் போகிறது. [சேகரின் படத்தைப் பார்த்து] அன்பா! என்னை மன்னித்து விடு, என்மீது குற்றமில்லை. நான் மாசற்றவள்-என்னை நான் தியாகம் செய்கிறேன் என்னைப் பெற்றவருக்காக. [கோப்பையை மேஜைமீது வைத்துவிட்டு படத்தை எடுத்து அணைத்துக்கொண்டு] அந்தோ ! இதுதானா எனக்குக் கதி! இன்று நிலவில் அவரும் நானும்... ஐய்யோ! நினைத்தாலே! (படத்தை மாட்டி விட்டுக் கண்களைக் கைகளால் மூடிக்கொள்கிறாள் ஒரு கணம். திடுக்கிட்டுக் கையை எடுக்கிறாள்.) சேகர்! சேகர்! கண்ணை மூடிப் பயன் இல்லை. என் கருத்திலே கலந்த கண்ணாளா! உன்னை நான் இழக்கத்தான் வேண்டுமா? மதியே ("வானிலுறை மதியே, வாழ்வின் நிதியே " என்ற ன்ற பாட்டை, சோகமாக மெல்லிய குரலில் இரண்டடி பாடுகிறாள், நிலவில் நடைபெற்ற காதல் விளையாட்டை எண்ணிக்கொண்டு.)

28

28