உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காட்சி 2

இடம்:—கடற்கரைச் சாலை.

நிலைமை:—நள்ளிரவு வளரும் நேரம் போதை மிகுந்த நிலையில் கண்ணாயிரம் தன் நண்பர்களுடன் காரில் கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருக்கிறான். கைகளைத் தட்டிக் கொண்டும், பாடிக்கொண்டும், காருக்குள் நாட்டியமாடுகிறான் கண்ணாயிரம். உடனிருக்கும் நண்பர்கள் அடக்கப் பார்க்கிறார்கள்; முடியவில்லை. கண்ணாயிரம் மோட்டார் ஓட்டுபவனின் முதுகில் தட்டி குளறியபடி......

கண்ணாயிரம்: டிரைவர்! காரை பீச்ரோடுக்குவிடு...

டிரைவர்: (திகைத்து ) பீச்ரோடிலே தானுங்க போய்க்கிட்டு இருக்குது வண்டி...

க: (மீண்டும் டிரைவர் முதுகில் அடித்தபடி) இடியட்! யாரை ஏமாத்தப் பார்க்கறே இதுதான் பீச் ரோடா!

[உடனிருக்கும் நண்பன் முதுகைத் தட்டிக் கொடுத்தபடி]

பிரதர்! நம்மை மடயன் என்றே எண்ணிக் கொண்டான் போல இருக்குது இந்த டிரைவர்.

[டிரைவரை அடித்து] ஓட்டு பீச்சுக்கு, நாடியா காத்துக் கிட்டு இருப்பா.

நண்பர்: நாடியாவை வீட்டிலே விட்டுவிட்டுத் தானே பிரதர் நாம் புறப்பட்டோம்...

க: ஆமாம். நாடியா ஓடியா! ஓடியா நாடியா! எப்படி நம்ம பாட்டு, புது ட்யூன்...டிரைவர்; ஓட்டமாட்டே பீச்சு பக்கம்.......

டி: புதுசா நான் ஒரு பீச்சு போட வேண்டியதுதான்....

[கண்ணாயிரம் கண்களைமூடிக் கொள்கிறான். மோடார், சிங்காரவேலர் மாளிகை வாயற்படியில் வந்து நிற்கிறது. கண்ணாயிரத்தை எழுப்பி விடுகிறான் நண்பன். கண்ணாயிரம் தள்ளாடுகிறான். நண்பன், என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறான். கண்ணாயிரம் தன் கையில் இருக்கும் அலங்காரப் பையை ஆட்டிக் கொண்டு, இடுப்பை வளைத்துக் கொண்டு நடக்கிறான், ஓடியா! நாடியா! நாடியா! ஓடியா! என்று பாடியபடி

326