பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

க: சு: ஏன்? உட்கார். நான் இந்த வீட்டுக்காரரின் ஒரே மகள்--தாய் இல்லை - நான் அழகாக இருக்கிறேனல்லவா? க: ஆமாம்...... சு அதனாலேதான் எனக்கு ஆபத்து. பெண்களுக்கு அழகு, ஆபத்தையும் உண்டாக்கும். அந்த அழகால் மற்றவர்களுக்கும் ஆபத்து உண்டாகும். என்னைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டுமென்று என் மாமன் காமுகன், கயவன், பிடிவாதம் செய்கிறான்.எப்படியோ என் அப்பாவைச் சரிப்படுத்திக் கொண்டான். க: அவனைக் கொன்றுவிடுகிறேன். அது முடியும் என்னால்... சுகொலை தெரியும், களவு தெரியும்; காதலிக்கமட்டும் தெரியாதா? இது தெரிந்துகொள்ளாமல் இவ்வளவு பெரிய ஆளாகிவிட்டாயே. க: காதல் என்பது சூது - சுகபோகிகளின் சதி - கவிகளின் கற்பனை மாளிகையிலே தரப்படும் மது- என்று என் தாயார் எனக்குக் கூறி இருக்கிறார்கள். சு: பாவம் உன் அம்மாவை எவனாவது பாதகன் ஏமாற்றி விட்டிருப்பான். மனம் நொந்து சொன்ன வார்த்தை அது. ஆனால் காதல் சதி அல்ல, வலை; சிக்கினவர் தப்புவதில்லை ; வானவில்: ஆனால் இருக்கும் வரையில் அழகு அற்புதமாக இருக்கும். கைகூடினால் விருந்து; இல்லையோ அதுவே விஷம். காதல் சந்திரன்போல ஜோதியாகவும் இருக்கும்; சிலசமயம் நெருப்பாகவும் எரிக்கும். சு: (சுசீலா இப்படிக் கூறும்போது, கள்ளன் மெள்ள நழுவப் பார்க்கிறான், அதைக்கண்டு விட்ட சுசீலா அவனை நோக்கி) போகாதே ... உட்கார். நீ போக முயற்சித்தால், நான் கூச்சலிடுவேன்-நீ அகப்பட்டுக் கொள்வாய். நான் இதைப் பற்றி உனக்குச் சாவகாசமாகப் பிறகு கூறுகிறேன். ஒரு பித்தனின் பிடியிலே என் தகப்பனார் சிக்கிக்கொண்டார். ஒரே ஒரு வழிதான் இருக்கிறது நான் தப்பித்துக்கொள்ள. ஜெமீன் தாரனாகப் பார்த்து. என்னை வேண்டாம் என்று சொல்லிவிட வேண்டும். அதற்குத்தான் இந்த ஏற்பாடு. என்னைப் பார்க்க, பேச, அவன் வரப்போகிறான். 5

33

33