பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காதலிக்கத் தெரிந்த உமக்குக் கடமையின் இலட்சணமும் தெரிந்தால் நான் இந்தக் கதிக்கு ஆளாகி இருக்கமாட்டேன். உம் நெஞ்சிலே வஞ்சகம் இருந்தது. கொஞ்சினீர். பிறகு, விதவை நமது அந்தஸ்தை, குலப்பெருமையைக் கொல்லும் நஞ்சு என்று எண்ணிக் கைவிட்டீர். தே: சமூகம் என்னை வற்புறுத்திற்று, மிரட்டிற்று. சொ : சமூகம், சாலை ஓரத்தில் உலாவும் அபலைகளை நம்பிக்கை கொள்ளும்படி செய்து பிறகு நட்டாற்றில் விடும்படியும் சொல்கிறதா? சமூகத்தின் கோபத்துக்குப் பயந்தீர்; உமது மனம்,உமக்கு ஒன்றும் கட்டளை பிறப்பிக்கவில்லையா? 'அவள் அபலை! உன்னை நம்பினாள்! உலகமே நீதான் என்று எண்ணினாள். அவளுக்கு நீ ஆயிரம் தடவை சத்தியம் செய்திருப் பாய்; அவளுடைய நெஞ்சு,நடுங்கியபோது, நீ அவளை பயப்படாதே என்று கூறினாய். அவள் அதற்குமுன் கேட்டறியாத தெல்லாம் பேசினாய் ; கண்ணீரைத் துடைத்தாய். கூந்தலைக் கோதினாய், கோமளமே என்று கொஞ்சினாய். அவளைக் கை விடாதே. நீ கைவிட்டால், அவள் சமூகத்தின் சாபம் என்று அழைக்கப்படும், விபசாரப் படுகுழியில் தள்ளப்படுவாள்!' என்று உம்முடைய மனம் சொல்லவில்லையா? மாளிகை வாசம் இருந்தால் என்ன, மனம் அங்கே மட்டும் இரும்பா! தே: நான் செய்ததற்காக நான் மனமார வருந்துகிறேன், சொர்ணம் என்னை மன்னித்துவிடு. சொ இப்போதும், 'உம்து சுகத்தைத்தான் தேடிக் கொள்கிறீர். மன்னிப்புக் கேட்கிறீர், உம்முடைய மனச்சாந்திக் காக. நான் அதனை உமக்கு அளிக்க முடியும். ஆனால், உலகம் என்னை மன்னிக்குமா? 'பாவம் ! அவள்மீது குற்றமில்லை! சமூகக் கட்டுப்பாட்டுக்குப் பயந்த ஒரு ஆடவனால் அவள் கைவிடப் பட்டாள்' என்று கூறுமா? என்னைப் பார்த்ததும் உலகம் என்ன சொல்லும்? போகிறாள் பார் விபசாரி!' குலுக்கி நடக்கிறாள்,' 'மினுக்கிக் கொண்டு திரிகிறாள்!' மிட்டாதாரனை மயக்கினாள்!' என்று கேலியும் கண்டனமும் கலந்த குரலில் பேசும். சீமான் களோ, கண்ட உடனே, என்ன விலை தரலாம் என்று மதிப்புப் போடுவார்கள். அவசரக்காரர்கள் விலாசம் விசாரிப்பார்கள் அழுத்தக்காரர்கள் பெருமூச்சுடன் நின்றுவிடுவார்கள்.

43

43