பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நான் இன்று நடமாடும் நாசம்! சரசமாடும் சனியன்! வலை வீசும் வனிதை! திருப்புகழ் பாடட்டுமா? [இரண்டோர் அடிபாடுகிறாள்] இப்படி எல்லாம், எச்சரிக்கை செய்கிறார்கள், என்போன்றவர் களைப்பற்றி. கண்ணாடி, என்னை ஓர் அழகி என்று கூறுகிறது. உலகமோ, அபாய அறிவிப்பு என்று சொல்கிறது. இவ்வளவும்... தே என் மனம் உறுதி கொள்ளாததால்தான்... சொ: இங்கே நான், மாளிகையிலே பார்க்கிறேன், கூடை கூடையாகப் பழம் வரும். தின்பாரின்றி அழுகும். அழுகிய பிறகு குப்பையிலே வீசுவார்கள். பிறகு அதிலே புழு நெளியும். நான் அழுகிய பழம்! அழுகியது என் குற்றமல்ல. தே: குற்றவாளி நான்தான். சொ: உலகம் விசித்திரமான நீதிமன்றம் : நீரே, கூண்டேறி உமது குற்றத்தை ஒப்புக்கொண்டால்கூட, தண்டனை எனக்குத் தான் தரும்! சொ: தே: சொர்ணம்! என் மனம் படும் பாடு சொல்லி முடியாது. என் இளமை, அழகு, அன்பு, ஆவி எல்லாவற்றை யும் அர்ப்பணம் செய்ய முன்வந்தேன்; உமது காலடியில் வைத் தேன், உதைத்துத் தள்ளினீர்-உதறித் தள்ளினீர் - இன்று.. துரத்திக்கொண்டு வருகிறீர். ஆனால் உமது பிடிக்கு அகப்பட முடியாத உயரத்தில் நான் இருக்கிறேன். தே: என் இருதயத்திலே நீ இடம் பெற்றுவிட்டாய். சொ: ஒரு வகையான திருப்தி! எனக்கும் ஒரு விதமான திருப்தி. ஏழ்மையிலேயே புரண்டு கிடந்தேன், மிட்டாதாரர் பணத்தால் அபிஷேகிக்கிறார் என்னை. தே பணமர் பெரியது? இப்போது ஏழை சொ: சந்தேகம் என்ன? வாழ்க்கையிலே பணம் பிரதான. மாக இருக்கும் விதமாகத்தானே உலகம் இருக்கிறது. என்றும் பணக்காரரென்றும் இரண்டு ஜாதி இல்லாமல், ஒரே ஜாதியாக இருந்தால், எனக்கும் இந்த எண்ணம் உண்டாகாது. பணமின்றி என் குடும்பம் பதைத்தபோது பணமா பெரிது என்று வேதாந்தம் பேசிக்கொண்டு, எங்களைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லையே! பணம் எந்த விதத்திலோ என்னிடம் வந்த

44

44