பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மி: [அவள் தலைமயிரைப் பிடித்துக் குலுக்கி அடிக்கிறார். தேவர் மயங்கிச் சாய்கிறார். சொர்ணத்தின் நகைகளை அறுக்கிறார்; ஓடிக்கிறார்.] மாலை! செயின் ! வளையல்கள்! தொங்கட்டம்! துரோகி! [நகைகளைச் கழற்றிக்கொண்டு, ஆடையைக் கிழிக் கிறார். அலங்கோலமாக்கப்படுகிறாள் சொர்ணம். இடையே எழுந்திருக்க முயலும் தேவரை. உதைக்கிறார் மிட்டாதாரர்.] மி: கள்ளி ! சாக்கடையிலே புரண்டுகொண்டிருந்தவளை. மாளிகையிலே குடிவைத்தேன்! என் வீட்டிலே விருந்துக்கு வந்தவனுடன்... ? ஆஹா ! எவ்வளவு துணிச்சலடி உனக்கு. (ஏதோ பேச முயற்சிக்கிறாள் சொர்ணம்.] பேசாதே! வாயைத் திறக்காதே! (மீண்டும் அடிக்கிறார். சொர்ணம் அலறி அழு கிறாள்.] மி: அழு! புரண்டு புரண்டு அழு! ஓலமிடு! துரோகி! உனக்கு மாளிகை வாசம் ஒரு கேடா? மிட்டாதாரணியைக் கிராமத்திலே குடியிருக்கச் செய்துவிட்டு, உன் மினுக்கிலே மயங்கி நான் உன்னை மாளிகையிலே கொலு வைத்தேன். குச்சுக்காரியே! எச்சிலைப் பொறுக்கும் நாயே! என்னை வஞ்சித்த பேயே! இதுபோல் என்னென்ன நடந்ததோ? [தலைமயிரைப் பிடித்துத் தூக்கி நிறுத்தி] அடி, சோற்றுக்கு அலைந்த சொர்ணம்! என்னைப் பார்த்துப் பேசு ! உனக்கு நான் என்ன கேடு செய்தேன்! ஏன் எனக்கு இந்தத் துரோகம் செய்தாய்? சொல்லு. காலைத்தொட்டுப் பயனில்லை! என் [காலில் விழுகிறாள்] மனதைக் கொட்டி விட்டாயே துரோகி! நான் உனக்கு என்ன தரமாட்டே னென்றேன். உனக்கு இங்கே என்ன இல்லை என்று இவனைத் தேடினாய். [சொர்ணம் மறுபடியும் பேச முயற்சிக்கிறாள்.) வாயைத் திறக்காதே! என் ஆத்திரத்தைக் கிளப்பாதே. என் முன் நில்லாதே! போ! ஓடு ! சொ : (அழுதபடி) இந்த நடுநிசியிலா?

46

46