பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஒரு விட்டுப் போகாதீர். உமது மாளிகையிலே வேண்டாம். மாட்டுக்கொட்டகையில் இடம்கொடும், என்னை மட்டும் ஏற்றுக் கொள்ளும். மேலும் மேலும் பழி தேடிக்கொள்ளாதீர். நான் நம்பி மோசம் போனேன். என்னை மேலும் நாசம் செய்யாதீர். [காலில் விழ, தேவர் அவளை உதறித் தள்ளிவிட்டுப் போக, இந்தக் காட்சியைக் கொஞ்ச நேரமாக மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு தோட்ட வேலைக்காரன், பாய்ந்து சென்று தேவரின் கரத்தைப் பலமாகப் பிடித்து இழுத்து] தோட் மகா யோக்யண்டா நீ ! ஒரு பெண்ணைக் கெடுத்துக் கீரை வழியாக்கிவிட்டு, குடும்பக் கௌரவம் குலப்பெருமை பேசி விட்டு, நம்பி வந்தவளை நடுராத்திரியிலே நடுத்தெருவிலே விட்டு விட்டுப் போகிறாயே? இதுதான் ஒரு ஆண் பிள்ளைக்கு அழகா? தே: (எதிர்பாராத சம்பவத்தால் கொஞ்சம் அஞ்சி) அப்பா நான் கலியாணமானவன். மேலும் ஜெமீன் குடும்பம். தோட் கலியாணமான உனக்கு கண்ட கண்ட பெண்கள் மேல் ஏன் கண் விழுகிறது? பெரிய ஜெமீன் குடும்பமோ! இருந்தால் என்ன? ஜெமீன்தாரன் கூட மனுஷ ஜாதிதானே ....... தே: நீ யார் ? இவள் பொருட்டு என்னிடம் வம்பு செய்ய? சொ: யாரோ பாவம், நெஞ்சிலே கொஞ்சம் ஈரமுள்ளவன். தோட் (தேவரைப் பார்த்து ) நான் ஒரு அன்னக்காவடி. நீ இலட்சாதிபதியாக இரு. அதனாலே, என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாமா? சொல்லு நீயே. தே: அப்பா! என் நிலைமை அப்படிப்பட்டது. என்னால் இவள் கஷ்டப்பட்டதால், நான் வேண்டுமானால், ஆயிரம் இரண்டாயிரம் பணம் கொடுத்துவிடுகிறேன்....... தோட்: (கேலியாக சொர்ணத்தை நோக்கி) இன்னம் என்னம்மா குறை! பணம் கொடுக்கிறாராம் பணம்! பணம் ஒன்று தவிர வேறே என்ன இருக்கிறது இவனிடம், கொடுப்பதற்கு? [தேவரைப் பார்த்து] ஏ! நீ யாராகவேனும் இரு. என் கண்ணாலே இந்தப் பெண்ணின் கஷ்டத்தைப் பார்த்தான பிறகு, இதுக்கு ஒரு நல்ல கதி காட்டாத முன்பு, உன்னை நான் விடப்போவதில்லை. 7.

49

49