பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

[தேவரைப் பார்த்து) வாங்கய்யா! வாங்க! சும்மா வாங்க. திமிரிக்கொண்டு (இழுக்க இழுக்கத் தேவர் இருக்கவே கோபம்கொண்டு) அடே! வாடா, மகா பெரிய யோக்யன் ! நாலு நாழியாக் கூப்படறேன், என்னமோ ராங்கி காட்டறே நம்பகிட்ட [தேவரைப் பற பறவென்று இழுத்துச் செல் லுகிறான்] காட்சி 22 இடம்: தோட்டக்காரன் வீடு, இருப்போர்:- தோட்டக்காரன், தேவர், சொர்ணம். [மூவரும் வீட்டுக்குள் வந்தபிறகு, ஒரு கை ஒடிந்த நாற்காலியைத் தூக்கிப் போட்டு, தேவரை உட் காரும்படி ஜாடை காட்டிவிட்டு, ஒரு பழைய பாயை விரித்து, சொர்ணத்தை உட்காரச் சொல்லிவிட்டு, தோட்டக்காரன் ஒரு செம்பிலே தண்ணீர் கொண்டுவந்து] தோ: (சொர்ணத்தைப் வேணுமா? பார்த்து) ஏம்மா! தண்ணி (தேவரைப் பார்த்து) ஐயாவுக்குப் பாலுகீலு வேணும். ஏழை வீடு, இங்கே ஏது? (சொர்ணத்தை பார்த்து) இந்த ஐயாமாருக குணமெல்லாம் நமக்கு ரொம்ப பழக்கம். தே: ஐயோ! அம்மா! [தேவர் வலியால் கூச்சலிடுகிறார்] தோ: ஏன்? என்னா? ஏன் ஐயாவையும் அம்மாவையும் கூப்பிடறே! தே: (கஷ்டத்துடன்) மாரெல்லாம் வலிக்குது. மயக்கமா இருக்குது! மூச்சு என்னமோ திணறுது. 51

[துடிக்கிறார்]

51