பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தோ : நெஜமா? பாசாங்கா? [தேவர் துடிக்கக் கண்டு, தோட்டக்காரன் உள்ளே போய் ஒரு கயிற்றுக் கட்டிலைத் தூக்கிவந்து போட்டு அதன் மேல் ஒரு விரிப்பும் போட்டு] இதுமேலே படுத்துக்கொள். என்னடா இது தர்மசங்கடமா போச்சு! உள்ளே போயிக் கொஞ்சம் வெந்நீர் போட்டு ஒத்தடம் கொடு. நான் போயி, பக்கத்திலே ஒரு வைத்யரு இருக்காரு, அவரை அழைச்சிக்கிட்டு வாரேன். (சொர்ணத்தைப் பார்த்து) ஏம்மா! உள்ளே போயி அடுப்பு மூட்டும்மா, யாருமில்லை, நானு ஒண்டி கட்டே. போயி வைத்யரே அழைச்சிக்கிட்டு வாரேன். அந்தப் பாவி எங்கே குடிச்சிப்போட்டு ஆடிகிட்டு இருக்கிறானே. [போகிறான்] காட்சி 23 இடம்:- வைத்தியர் வீடு. இருப்போர்:-வைத்தியர், அவர் மனைவி. வைத்தியர் இருமல் நோயால் கஷ்டப்படுகிறார். அவர் மனைவி பக்கத்தில் இருந்து கொண்டு பேசுகிறாள்.] ம்: இருமி இருமி, அண்டை பக்கத்தைக்கூடத் தூங்க விடாதிங்க. பாழாப்போன சாராயத்தைக் குடிச்சிப்போட்டுத்தான் குடலே வெந்து கிடக்குதே. வை: சீ! கழுதேமுண்டே. ம: அட உன் மண்டையிலே ஏதாச்சும் மூளை கீளை இருக் குதா? கல்லாட்டமா பக்கத்திலே புருஷ்ண்ணு உட்கார்ந்துகிட்டு, என்னைப் போயி முண்டேன்னு சொல்லறயே? உன் புத்தி யிருக்கிற லட்சணத்தைப் பாரு. (உள்ளே வரும் தோட்டக்காரனைப் பார்த்து )

52

52