பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வை: யாரு? தோ: நான்தான், வேலன். வை: ஏம்பா! என்னா சமாசாரம். (இருமுகிறார்) தோ: ரொம்ப இருமறீங்களே! காய்ச்சலோ. வை: அதெல்லாம் இல்லைபோ! காச்சல் கீச்சல் வந்தா நம்மகிட்ட என்ன, மருந்துக்கா பஞ்சம்! தண்ணி சாப்பிட்டேன், புறை ஏறிப்போச்சு (இருமுகிறார்) தண்ணி சாப்பிடுகிறபோது இவ என்னமோ பேசிச் சிரிப்புக் காட்டிவிட்டா (இருமுகிறான்) அது கடக்குது கழுதே! ஒரே பொட்டலத்திலே ஓடிப்போகும். நீ என்னா வேலையா வந்தே. தோ: நம்ம மச்சான், வீட்டிலே வந்திருக்கிறாரு; மார் வலின்னு துடிக்கிறாரு. வை: (எழுத்து தலையிலே பாகையை வைத்துக்கொண்டு, புறப்படுகிறார்) அது கடக்குது கழுதே! ஒருவேளை கஷாயத்திலேயே ஓடிப் போகும் வா! (இருவரும் கிளம்புகின்றனர்] காட்சி 24 இடம்:- தோட்டக்காரன் வீடு. இருப்போர்: தேவர், சொர்ணம், தோட்டக்காரன். வைத்தியர், (வைத்தியர் வருகிறபோது தேவருக்கு வெந்நீர் ஒத் தடம் கொடுத்துக் கொண்டிருக்கிறாள் சொர்ணம். வைத்தியர் கைபார்த்துவிட்டு, உடம்பிலே பல இடங்களில் அடிபட்டிருப்பதையும் பார்த்து விட்டு, தோட்டக்காரனைப் பார்த்துக் கூறுகிறார்] வை: ஏம்பா! சமாசாரம் வேறேயா இல்ல இருக்கு. மார்வலி நோவாலே ஏற்பட்டதில்லை. ஆசாமியை எங்கேயோ சரியாக் குமிறிப்பூட்டாங்கப்போல இருக்கே. தோ: அப்படின்னா

53

53