பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வை: அட, எங்கேயோ அடிஅடின்னு அடிச்சிருக்காங்க. மேல் காயத்தைவிட உள் காயம் அதிகம். கவனிக்காமே விட்டு விட்டா உள்காயம் ரொம்ப ஆபத்தாச்சே. தேர்: சரி. அதுக்கு என்னா செய்யணுமோ செய்யுங்க. வை: கைகால் பிசகி இருக்குமோ? [தேவரின் கைகாலை நீட்டியும் மடக்கியும் பார்க்கிறான். தேவர் வலி தாளாது கூச்ச லிடுகிறார்] நினைச்சாப்போலத்தான் இருக்கு. கால்பூட்டு கொஞ்சம் விலகி இருக்கு. தோ: ஆமாம்! நடக்கக்கூட முடியாதுன்னு சொன்னான். சொ : நொண்டி நொண்டித்தான் நடந்தாரு. வை: அது கடக்குது கழுதே! மூணு நாள் புச்சிலைக் கட்டிலே பறந்து போவுது போ. சொ : மூணு நாளாவுமா? வை: அட, இன்னக்கி ஜூரம் வந்திடுச்சேல்லோ? [சொர்ணம் தேவரைத் தொட்டுப் பார்த்து] ஆமாம், நெருப்பாட்டம் இருக்கே! (வைத்தியரும் தொட்டுப் பார்த்து] ஜூரந்தான்! அலட்டுமேலே வந்த ஜூரம். அது கடக்கு கழுதே! அதுக்கு ஒரு மாத்திரை தரேன், சொல்லாமே ஓடிப் போவும். அப்பாலே மூணு நாலு நாள் பச்சிலை கட்டினா, ஆளு பழையபடி நடக்கலாம். வாப்பேன், மாத்திரையும், கொஞ்சம் தைலமும், தர்ரேன். சொ: மேல் காயத்துக்குக்கூட (போக எழுந்திருக்கிறான்) வை : அனுப்பறேன். உம்! நம்மகிட்ட இருக்கிற பஸ் பத்துக்கும் மாத்திரைக்கும் தைலத்துக்கும், நாம்பளும் கொஞ் சம் வெள்ளைக்காரன் பாஷையைப் படிச்சிக்கிட்டு, கோட்டு கீட்டு மாட்டிக்கிட்டர், பெரிய டாக்டருதான்! இப்ப யாருக்குத் தெரியுது தமிழ் வைத்யருடைய பெருமை? தமிழ் வைத்யம்னா கிள்ளுக்கீரையா நினைக்கிறாங்க. (இருவரும் போகின்றனர்.) [அவர்கள் போனபிறகு சொர்ணம், தேவ ரைக் குலுக்கி எழுப்பி]

54

54