பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சீ: அதனாலேதான் அந்தப் பயல், அவளுக்கு ஆயிரம் ஆயிரமாகக் கொட்டித் தருகிறான். ந: தந்து என்ன கண்டான்? குட்டி இங்கே வரப் போகிறாள். பிறகு.... ஒரு தடவை தங்களைக் கண்டா போதாதோ? பிறகு அவளை அவன் ஆயிரம் நமஸ்காரம் செய்து அழைத்தாலும் போவாளோ? வே: [வேலையாள் அடக்கமாக நின்றுகொண்டு ) கோனாரு வந்திருக்காரு. சீ யாரு? கோவிந்தனா? வே: ஆமாங்க. சீ: அதைத்தான் கோநாரு, வந்தாருன்னு ரூ போடறியா ரூபோய் வரச் சொல்லு. [வேலையாள் போய்க் கோவிந்தனை வரச் சொல்கிறான்.) கோவிந்தன் ஒருபுறமாக வந்து நிற்கிறான்- இடுப்பின்மேல் வேட்டியைக் கட்டிக்கொண்டு. சீமான், அவனைக் கவனிக்காமல் தன் அலங்கார வேலையிலேயே இருக்கிறார்.) சீ: (நண்பனைப் பார்த்து) எப்படி இருக்கு? (கோவிந்தன், தன்னிடம்தான் சீமான் பேசுகிறார் என்று எண்ணிக்கொண்டு ] கோ: பயிருங்களா? சீ: (கோபத்துடன் குத்தகைக்காரனைப் பார்த்து) உன்னை யாடா இப்போ பேசச் சொன்னது. பயிரு கதை பேச வந்து விட்டாயோ, மகா யோக்யன்போல். [நண்பனைப் பார்த்து, தன் கரத்தைக் காட்டி] எப்படி இருக்கு இந்த ரிஸ்ட் வாட்ச்! ந: பேஷா இருக்கு. ஆனா ஆலந்தூர் நாயுடு.. சீ : அவனிடம் இருக்கிற ரிஸ்ட் வாச், ரொம்ப அம்பக்கய்யா. இரண்டும் ஒரே மேக்தான். ஆனா கம்பெனியிலே, கொஞ்சம் கெட்டுப்போனதை அவனிடம் தள்ளிவிட்டு, முதல்தரமானதை நம்மிடம் கொடுத்தார்கள். விலை என்ன சாமான்யமா? 500 ரூபாய்,

58

58