பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தே: ஆ!பவானி! நீயா-என்ன இது மூக்குக் கண்ணாடி, மாறு வேஷம். [எதிர்பாராதவிதமாகத் தேவரைக் கண்ட பவானி அலறி] ஐயோ மோசம் போனேன். [பவானி,ஓட முயற்சிக்கிறாள். கால் நடுங்குகிறது. தேவர் ஓடிச்சென்று பவானியின் தோளைப் பிடித்துக் குலுக்குகிறார். பயத்தால் பவானியின் உடல் நடுங்குகிறது. முகம், வெளுத்துவிடுகிறது.] தே: எங்கே வந்தாய்? ஏன் வந்தாய்? [ஆவேசம் வந்தவர்போலக் கூச்சலிடுகிறார்.] சொ: (கேலியும், கோபமும் கலந்த குரலில்) பவானி, விலாசனியாக வந்திருக்கிறாள்; இலட்சாதிகாரிக்கு இன்பமூட்ட. [தேவர், சொர்ணத்தை அடிக்கக் கை ஓங்குகிறார். சொர்ணம் பயப்படாமல்] விபசாரி. விலாசனியாக. நான், சொர்ணம், கேவலம் வந்தவள் தங்கள் தர்ம பத்தினி பவானிதேவி 1 அவளுடன் வந்திருப்பவர், ஜெகவீரர்-- அண்ணன்--ஜெமீன்தாரன்-ஆனால் இங்கே, வெட்கம் மானமின்றி, சொந்தத் தங்கையைத் தன் வைப்பு என்று கூச்சமின்றிக் கூறினான். இங்கே உள்ள பண மூட்டைக்கு. தே: பவானி! பவானி! இது என்ன. விபரீதம்? ஏன் வந்தாய் இங்கே? ஏன்? ஏன்? [பவானி. திகைக்கிறாள். அவளுடைய கழுத்தை நெறிக்கிறார் தேவர், அவள் கூவுகிறாள். ஜெக வீரன் ஓடிவருகிறான். காட்சியைக் காண்கிறான். காமிரா ஒரு நிமிஷம் வேலை செய்கிறது. பவானி பிணமாகிறாள், சொர்ணம் ஓடி விடுகிறாள். ஜெகவீரன் பவானியைத் தொட்டுப் பார்த்து.) ஜெ விலாசனி மறைவாள் என்று நினைத்தேன், பவானியே இறந்துவிட்டாள். தே: இறந்துவிட்டாள்! பவானி இறந்துவிட்டாள்!

68

68