பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(எழுந்திருக்கிறான். வேதம் அவனைத் தொட் உட்காரவைத்து] வே: உட்காருங்க! (ஆறுமுகத்தைப் பார்த்து) இவரைப் பார்க்கறபோதே பெரிய மனுஷருன்னு தெரியுது இல்லை. ஆ: அதுக்கென்ன சந்தேகம் | நான் போயி, சாயா சாப்பிட்டுவிட்டு வர்ரேன். வே: (வாலிபன் மீது உராய்ந்தபடி) அண்ணன் வெளியே போகணுமாம், போய்த் தொலைக்கட்டும். அது இங்கே இருந்தா, வளவளன்னு பேசிகிட்டே இருக்கும். போகட்டும் வெளியே. நாம்ப நிம்மதியாப் பேசலாம்...... வா: (புரியாமல்) ஏன் அவர் இருந்தா என்னா? வேணுமானா போயிட்டு வரட்டுமே! கடை இருக்குமா இந்த நேரத்திலே. ஆ (கொஞ்சம் உரத்த குரலிலேயே) என்னா வேதம் ! சாயா குடிக்கப் போகணும், காது கேட்கலே! ஏது! சொக்கிவிட்டாயோ! வே: (உரத்த குரலிலேயே) அட கொஞ்சம் இரு அண்ணே, அவரு காசு எடுக்கறதுக்குள்ளே கூச்சப்போடறே. (வாலிபனை நோக்கிக் கொஞ்சுவதுபோல] ஏதாச்சும் சில்லறை இருந்தாக் கொடுங்கோ. இந்தச் சனியனைத் தொலைச்சிவிடுவோம். வா : சில்லறை இல்லையே. (வாலிபன் மடிமீது உட்கார்ந்து கொண்டு) வே: ரூபாயர் இருக்கா? வா: இல்லையே. வே: (ஜேபியைத் தடவிக்கொண்டு) நோட்டா இருக்கா. வா: (பரிதாபத்துடன்) இல்லையே. ". (மடியிலிருந்து எழுந்து கொஞ்சம் கோபமாக.] வே: என்னய்யா இது ? விளையாட்டா? எடுங்க. அண்ண னுக்குக் கொடுக்கணும். நமக்கும் ஏதாச்சும் வாங்கணும். பாலைக் காச்சி வைச்சேன், பூனை உருட்டிவிட்டுது. பால் வாங்கணும். வா(மடியிலிருந்து ஒரு செயின் எடுத்துக் காட்டி) இதோ பார்! இதுதான் இருக்கு.

87

87